மேலும் அறிய

எனக்கு சுயமரியாதை உண்டு... தெலுங்கராக பிறக்காதது என் தவறா? - பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு

நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்பதை பார்த்து வாக்களித்தார்கள். தெலுங்கர் அல்லாதவருக்கு வாக்களிக்காதீர்கள், தெலுங்கர் அல்லாதவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது, தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என...

தமிழ் திரையிலகில் நடிகர்களுக்கு என தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம் இருப்பதை போல், தெலுங்கு திரையுலகிலும் மூவி ஆர்ட்ஸ் அசோசியேசன் (MAA) என்ற பெயரில் நடிகர்கள் சங்கம் செயல்பட்டு வருகின்றது.  இதில் மொத்தம் 900 நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில்,  தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் புதிய  தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இந்தத் தேர்தலில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டார். பிரகாஷ் ராஜூக்கு தெலுங்கு திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அவரது தம்பியான பவர் ஸ்டார் பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரகாஷ்ராஜ் அணி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 900 பேரில் 833 பேருக்கு மட்டுமே ஓட்டுப் போடும் உரிமை உள்ளது. நேற்று நடந்து முடிந்த தேர்தலில் 655 நடிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்,  விஷ்ணு மஞ்சுக்கு 381 வாக்குகள் கிடைத்தன. ஆனால், வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களை மட்டுமே பெற்றார். இதனால் 113 வாக்குகள் வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், ”தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 650 உறுப்பினர்கள் தேர்தலில் பங்கெடுத்து வாக்குகளை பதிவு செய்துள்ளார்கள். தேர்தலில் வெற்றிபெற்ற மஞ்சு விஷ்னு, சிவ பாலாஜி, ரகு பாபு உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துக்கள். இவர்கள் சங்கத்துக்கும், நடிகர்களுக்கும் தேவையான பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

எனக்கு சுயமரியாதை உண்டு... தெலுங்கராக பிறக்காதது என் தவறா? - பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு

நடந்து முடிந்த இந்த தேர்தலில் பிராந்தியவாதம் மேலோங்கி இருந்ததாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். “நான் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் என்பதை பார்த்து வாக்களித்தார்கள். தெலுங்கர் அல்லாதவருக்கு வாக்களிக்காதீர்கள், தெலுங்கர் அல்லாதவர் தேர்தலில் வாக்களிக்கலாம், ஆனால் போட்டியிடக் கூடாது என்ற கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனது பெற்றோர்கள் தெலுங்கர்கள் இல்லை. அது எனது தவறோ எனது பெற்றோரின் தவறோ கிடையாது. உறுப்பினர்கள் நல்ல தெலுங்கு மகனை தேர்வு செய்துள்ளார்கள். நானும் அவரை ஏற்கிறேன். ஆனால், ஒரு கலைஞனாக எனக்கு சுய மரியாதை உள்ளது. எனவே தெலுங்கு நடிகர் சங்கமான MAA உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன்.” என பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget