மேலும் அறிய

Nayanthara Birthday Exclusive : வாவ்.. இந்த பிறந்தநாளை இப்படி கொண்டாடப்போகிறாரா நயன்தாரா?

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா, விரைவில் அட்லியின் ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா, விரைவில் அட்லியின் ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா வரும் 18-ஆம் தேதி (நவ 18) தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் எப்படி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. நயன்தாராவுக்கு அண்மையில் வாடகைத் தாய் முறைமையில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவர் இந்தப் பிறந்தநாளை உள்நாட்டிலேயே கொண்டாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்மையில் தான் நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். இது குறித்து தன் விக்னேஷ் சிவன், ”நயனும் நானும் பெற்றோர் ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளுடன் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களிடம் வந்துடைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.

இப்படியாக 2022 நயன்தாராவுக்கு மிகவும் ஸ்பெஷலான ஆண்டாக அமைந்துள்ளது. திருமணம், குழந்தை பிறப்பு என வெற்றிகரமான ஆண்டாக அவர் அனுபவித்திருக்கிறார். இந்நிலையில், அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குழந்தைகளுடன் நேரம் செலவிடும் வகையில் அவர் கொண்டாட்டத்தை மிக எளிமையாக அன்பானவர்களுடன் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிகிறது.

மீடியா போர்ட்டலான 'இன்ஃபினிட்டி நெட் வொர்த்' படி, நடிகை நயன்தாராவின் நிகர மதிப்பு 22 மில்லியன் டாலர்கள் , அதை ரூபாயாக மாற்றும் போது சுமார் ரூ. 165 கோடி . அவரது வருமானத்தின் பெரும்பகுதி அவரது திரைப்படங்கள் மூலம் கிடைக்கிறது. இது மட்டும் இன்றி விளம்பரங்களில் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் வருகிறது.  நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் வரவிருக்கும் திரைப்படத்திற்காக சுமார் ரூ 10 கோடியை வசூலித்து வருகிறார், இதனால் தென் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

தென்னிந்திய நடிகைக்கு ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளது. டெக்கான் ஹெரால்ட் செய்தியின்படி, நயன்தாரா சமீபத்தில் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாங்கினார், அதை அவர் சென்னை-ஹைதராபாத் மற்றும் சென்னை-கொச்.சியில் இருந்து தனது பயணங்களுக்கு பயன்படுத்துகிறார். அவரது தனிப்பட்ட ஜெட் மட்டுமல்ல, 4 சக்கர வாகனங்கள் என்று வரும் பொழுது நயன்தாராவுக்கு விருப்பமான வாகனங்கள் என்று சில வாகனங்களை வைத்திருக்கிறார். கார் டெகோவின் கூற்றுப்படி, ரூ. 74.50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ரூ. 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350டி ஆகியவற்றை வைத்திருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது . இது தவிர, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் மற்றும் பிரமிக்க வைக்கும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஆகியவற்றையும் அவர் வைத்திருக்கிறார், ஆக இந்த கார்களின் மதிப்பு சுமார் ரூ.1.76 கோடிக்கு வருகிறது.

இவைதவிர நயன்தாரா ஒரு புதிய மற்றும் லாபகரமான எண்ணெய் வணிகத்தில் முதலீடு செய்வதாகக் குறிப்பிடப்பட்டு, அதற்காக பெரும் தொகையை செலவிட்டதாகக் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Embed widget