மேலும் அறிய

HBD Rashmika Mandanna: இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா.

இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா 

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு ராஷ்மிகா சென்றார். அங்கு அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ராஷ்மிகாவை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. 

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் இந்திய அளவில் ராஷ்மிகாவை கொண்டு சேர்ந்தது. இந்த படத்தால் அவரின் மார்க்கெட் நிலவரம் எதிர்பாராத அளவுக்கு எகிறியது. சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, புஷ்பா படங்கள் ராஷ்மிகாவை புகழின் உச்சிக்கே கூட்டிச் சென்றது. 

தமிழில் அறிமுகம் 

2021 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா. இதனைத் தொடர்ந்து 2வது படத்திலேயே நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும் ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு, சீதா ராமம், குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். தொடர்ந்து புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள் ப்ரண்ட், சாவா என அனைத்து மொழிகளிலும் அவர் படம் நடித்து வருகிறார். 

ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு 

28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான கர்நாடகாவில் சொந்தமாக ஒரு வீடு இருப்பதாகவும், அவர் ஒரு படத்துக்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. 

ராஷ்மிகாவை சுற்றிய சர்ச்சை 

ராஷ்மிகா அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்றார். ஆனால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றி புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றதால் திருமண முடிவில் இருந்து பின்வாங்கினார். அதேசமயம் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஷ்மிகாவின் கவர்ச்சியான போலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இந்த வீடியோவை பரப்பியவரை கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
Embed widget