மேலும் அறிய

Dhruva natchathiram Update: விக்ரமின் ”துருவ நட்சத்திரம்” படத்திற்கு வந்தது விடிவு காலம்.. ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பதிவு

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவநட்சத்திரம் படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவநட்சத்திரம் படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் டிவீட்:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”கௌதம் மேனனின் துருவநட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசை தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டேன். டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறோம் என ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார். கௌதம் மேனனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள துருவநட்சத்திரம் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

துருவநட்சத்திரம்:

காதல் சொட்டும் விண்ணைதாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களையும் தாண்டி காக்கா, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்‌ஷன் படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்த வரிசையில் மேலும் ஒரு ஆக்‌ஷன் படமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது தான் துருவ நட்சத்திரம்.

கவனம் ஈர்த்த விக்ரம் டீசர்

சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு  கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கியது. ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன், விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்த இப்படம்,  கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கிளிம்ப்ஸ், 4 ஆண்டுகளுக்கு முன்பான டீசர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இரண்டு பாடல்கள் என அனைத்துமே பெரும் வரவேற்றபை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

7 ஆண்டுகளாக தொடரும் இழுபறி:

இதனிடையே எதிர்பாராத விதமாக, 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நிதிப்பற்றாக்குறையால் முடங்கியது. இதனால், விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இருவரும் தங்கள் வெவ்வேறு படங்களில் பிசியாகினர். இந்நிலையில், இருவரும் இணைந்து பேசி இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கியதாவும், டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

முடிவுக்கு வருகிறதா காத்திருப்பு?

தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசிய கௌதம் மேனன், படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியதாகவும், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் நிலைக்கு முன்னேறிவிட்டதாகவும், ரிலீஸ் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  VFX பணிகளை மேற்கொள்ள உள்ளதாவும், தானும் பட ரிலீசுக்கு ஆர்வமாகக் காத்திருப்பதாகவும் கௌதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், அவரது பிறந்த நாளையொட்டி, துருவநட்சத்திரம் படத்திற்கான பின்னணி இசை சேர்க்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget