மேலும் அறிய

105 Minutes | படம் முழுவதும் ஒரே ஆள்.. ஒத்து செருப்பு பட பாணியில் நடித்த ஹன்சிகா மோத்வானி!

நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள "105 மினிட்ஸ்" என்ற திரில்லர் திரைப்படத்தை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய எங்கேயும் காதல் என்ற திரைப்படம் மூலமாக நடிகை ஹன்சிகா மோத்வானி திரையுலகில் அறிமுகமானார். அவர் சிவகார்த்திகேயன், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், சூர்யா, விஜய் என பல நடிகர்களுடனும் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி 105 மினிட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்ததிரைப்படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மட்டுமே நடித்துள்ளார். திரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்தின் ஒட்டுமொத்த கதைக்களமும் ஒரே வீட்டில் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


105 Minutes | படம் முழுவதும் ஒரே ஆள்.. ஒத்து செருப்பு பட பாணியில் நடித்த ஹன்சிகா மோத்வானி!

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பு நிர்வாகம் உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தினை தமிழ், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமின்றி சைனீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் 20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.


105 Minutes | படம் முழுவதும் ஒரே ஆள்.. ஒத்து செருப்பு பட பாணியில் நடித்த ஹன்சிகா மோத்வானி!

ஹன்சிகாவின் இந்த திரைப்படம்  திரை நேரத்தில், மிகச்சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படத்தினை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், ஒரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப்படமும் ஒரே ஷாட்டில் வரும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முழு படமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகாவின் 53வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ராஜா துஷா இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் ஏற்கனவே ஒரே கதாபாத்திரத்தை மட்டும் கொண்டு நடிகர் பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஒத்த செருப்பு படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டிலும் 2019ம் ஆண்டு 1917 என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியாகி ஏராளமான விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்!  யாருக்கு ஜாக்பார்ட்!  மோடி, அமித்ஷா போடும் கணக்கு
பாஜக தேசிய தலைவராகும் தமிழ் பெண்! யாருக்கு ஜாக்பார்ட்! மோடி, அமித்ஷா போடும் கணக்கு
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Hybrid Cars Offer: ஹைப்ரிட் கார்களுக்கே ரூ.1.85 சலுகையா? அள்ளி வீசிய நிறுவனங்கள், எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Embed widget