மேலும் அறிய

Dear Trailer : குறட்டை பிரச்சனையை வைத்து இன்னொரு படமா..? டியர் படத்தின் டிரைலர் இதோ

ஜி.வி பிரகாஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் படத்தின் டிரைலர் வெளியாகி கவனமீர்த்துள்ளது

குட்நைட் படத்தில் நாயகி குறட்டை விடுவதுபோல் நாயகி குறட்டை விடுவதை மையமாக வைத்து டியர் படம் உருவாகியுள்ளது

டியர்

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் ஜி.வி  நடித்து இதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் டியர்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், மற்றும் நந்தினி உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

டியர் டிரைலர்

கணவன் மனைவிக்கு இடையில் குறட்டை பிரச்சனை எவ்வளவு தீவிரமான பிரச்சனையாக இருக்கிறது என்பதை குறட்டையை வைத்து வெளியாகும் படங்களை வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம் .

கடந்த ஆண்டும் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் ஒரு குறட்டையால் ஒரு குடும்பத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை காட்டியது. அதுவும் ஒரு சமூகத்தில் ஒரு ஆண் குறட்டை விடுவதும் அதே சமூகத்தில் ஒரு பெண் குறட்டை விடுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

அப்படியான ஒரு பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் டியர். இஞ்சினியரிங் படித்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் நாயகன் ஜி.வி பிரகாஷ் அவரது குடும்பம். மறுபக்கம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். லைட்டாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் நாயகன், சிங்க கர்ஜனைபோல் குறட்டை விடுபவர் நாயகி.. இந்த இருவருக்கும் திருமணம் நடந்து முதலிரவில் தொடங்குகிறது இந்த குறட்டை பிரச்சனை.

இதனால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம் அதனால் வெடிக்கும் பிரச்சனைகள் என காமெடியும் எமோஷனும் கலந்து படமாக டியர் படம் இருக்கும் என்பதற்கு இந்த டிரைலர் சான்று. 

இப்படியான ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்வது என்பது மிக சிக்கலானது. ஆனால் குட் நைட் படத்தில் மிக கவித்துவமான ஒரு தீர்வை சமாளிப்பாக இல்லாமல் எதார்த்தமாக சொல்லியிருந்தார்கள். இந்த முறை இந்த பிரச்சனைக்கு டியர் படக்குழு என்ன மாதிரியான தீர்வை சொல்லப் போகிறது என்பதை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

தலைப்பு செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " ஃபீல் மை லவ் " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
Embed widget