டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் கையை பிடிக்க கதாநாயகி தயங்கிய நிலையில், விக்ரம் செய்த செயல் குறித்து அவர் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்.

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பழைய பேட்டியில், நடிகர் விக்ரமுடன் நடித்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கதாநாயகி தன்னுடைய கையை பிடிக்க சங்கடப்பட்ட நிலையில், விக்ரம் செய்த ஒரு செயல் அந்தச் சூழலை எப்படி மாற்றியது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் துணை கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் டெல்லி கணேஷ். பல்வேறு திரைப்படங்களில் தந்தை, மூத்தவர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் அறிமுகமானவர். 2024ஆம் ஆண்டு மறைந்த டெல்லி கணேஷ், தனது திரைப்பயணத்தில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை பழைய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். அந்தவகையில்நடிகர்விக்ரமுடன்ஒருபடத்தின்படப்பிடிப்பில்நடித்தபோதுநிகழ்ந்தசுவாரஸ்யமானதகவல்ஒன்றைபார்க்கலாம்
கையை பிடிக்க தயங்கிய நடிகை
விக்ரமுடன் நடந்த அந்த சம்பவம் பற்றி டெல்லி கணேஷ் கூறியதாவது “நான் விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்தேன். அதில் ஒரு பாடல் காட்சி. அந்தப் பாடலில் நான் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தேன். பாடலின்போது என் மகளின் கையைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அருகே நடந்து செல்ல வேண்டும். அவள் படிக்கட்டுகளில் இறங்கி குளத்திற்குள் செல்லும்போது, நான் அவளுடைய கையைப் பிடித்து கவனமாக அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆனால், நான் கையைப் பிடித்தபோது அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ‘இந்த மனிதர் ஏன் என் கையைப் பிடிக்கிறார்?’ என்று நினைப்பது போல் இருந்தது. அவளுக்கு சங்கடமாக இருக்கும்போது நான் எப்படி கையைப் பிடிப்பது என்று நினைத்தேன். எனக்கும் அப்படி எந்த எண்ணமும் கிடையாது. அதனால் அவளுடைய கையை விட்டுவிட்டேன்.
உடனே இயக்குநர், ‘சார், கையைப் பிடியுங்கள்’ என்று சொன்னார். ஆனால், நான் வேண்டாம் என்று சைகை செய்தேன். கடைசியில் இயக்குநரும் அதை விட்டுவிட்டார்.
விக்ரம் செய்த செயல்
அப்போது விக்ரம் அங்கு வந்தார். அவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். என்னை பார்த்ததும் உடனே ஓடி வந்து, ‘டெல்லி கணேஷ் சார்’ என்று சொல்லி என்னைக் கட்டிப்பிடித்து அன்பாக வரவேற்றார். பின்னர் அங்கிருந்த கதாநாயகியைப் பார்த்து, ‘ஹாய், எப்படி இருக்கீங்க? ஃபைன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அதைப் பார்த்த கதாநாயகி, ‘ஓ... இவர் பெரிய மரியாதைக்குரிய மனிதர் போல இருக்கிறாரே. ஹீரோவே இவரை இவ்வளவு அன்பாக வரவேற்கிறாரே’ என்று நினைத்திருக்க வேண்டும். அதன்பிறகு அவளும் திரும்பி வந்து என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















