மேலும் அறிய

M.S.DHONI| ”வாட் அ மேன்” - தோனியை புகழ்ந்து தள்ளும் பாலிவுட் பிரபலங்கள் - தீயாய் பரவும் புகைப்படங்கள் !

"சம்பளம் குறைவுதான் ஆனாலும் விளம்பர படங்களில் நடிக்க வரும் தோனியை பார்க்கவே அந்த வேலையை செய்தேன்” என்றார் ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் , கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி கால்பந்து விளையாடிய காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. விரைவில் நடைபெற உள்ள ஆல் ஸ்டார் கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட  கிரிக்கெட் வீரர்கள் சிலர்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலந்துகொண்ட தோனி மகிழ்ச்சியில் ரன்வீர் சிங்கை கட்டியணைத்துக்கொண்ட காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ரன்வீர் சிங் மட்டுமல்லாது பாலிவுட் நடிகர்கள் பலரும் இந்த பயிற்சியின் போது தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகின்றன. பலரும் “அண்ணன்”, “டார்லிங்”, ஹீரோ , தல தரிசனம் என புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களில் தோனி கூடுதல் ஸ்டைலுடன் காணப்படுகிறார். இந்நிலையில் நேற்று பாலிவுட் நடிகையும் இயக்குநருமான ஃபராகான் , தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் “ மகியுடன் இன்றைய நாள், என்ன ஒரு அற்புதமான மனிதர்.  நேரம் தவறாமை, எல்லோரிடமும் (விளையாட்டு வீரர்கள், கிளைண்ட்ஸ்) எளிமையாக பழகும் விதம் , அவர் சிரித்துக்கொண்டே எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணம் இதெல்லாம் கண்டு நான் அவருக்கு ரசிகையாகிவிட்டேன் “ என குறிப்பிட்டுள்ளார். ஃபரா கானுடன் இருக்கும் புகைப்படத்தில் கூல் தோனி  '7 ' என்ற அவருக்கான கிரிக்கெட் எண்ணுடன் கூடிய டி-சர்ட் - ஐ அணிந்துள்ளார். அவர் ஹேர் ஸ்டைலில் கியூட்டால  ஒரு டெய்லும்  இணைந்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)


இந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் செய்த நடிகர் ரன்வீர் சிங்  “அவர் மிகச்சிறந்தவர் “ என பதிவிட்டார். ரன்வீர் சிங் இளம் வயது முதலே தீவிரமான தோனி ரசிகர்.  தோனி கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  அப்போது நடிகர் ரன்வீர் சிங் போட்ட பதிவு மிகவும் உருக்கமாக இருந்தது. அதில் “ எனக்கு 20 வயது இருக்கும் பொழுது நான் விளம்பர படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன் . எனக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது , ஆனால் சம்பளம் குறைவுதான் ஆனாலும் விளம்பர படங்களில் நடிக்க வரும் தோனியை பார்க்கவே அந்த வேலையை செய்தேன்” என குறிப்பிட்டிருந்ததும் நினைவு கூறத்தக்கது.


M.S.DHONI| ”வாட் அ மேன்” - தோனியை புகழ்ந்து தள்ளும் பாலிவுட் பிரபலங்கள் - தீயாய் பரவும் புகைப்படங்கள் !
கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னதாகவே தோனிக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். இது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். சிறு வயதில் கால்பந்து விளையாட்டில் அசத்துவாராம் . கிரிக்கெட் விளையாடும் பொழுதும் கூட ஓய்வு நாட்களில் அவர் கால் பந்து விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்து அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும். இந்நிலையில் மும்பையில் நடைபெற உள்ள ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியில் தோனி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி கால்பந்தாட்டத்தில் மிகச்சிறந்த கோல் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget