மேலும் அறிய

உங்க தன்னடகத்திற்கு அளவு இல்லையா...பேட்டியாளரிடம் திமிராக பதில் சொன்ன விஜய் சேதுபதி

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி பேட்டியாளரின் கேள்விக்கு பதில் சொன்ன விதம் ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது

மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. சில நேரங்களில் மனதை கவரும் அவரது பேச்சு சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்த விதம் ரசிகர்களுக்கு கசப்பான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. 

காந்தி டாக்ஸ் படக்குழு பேட்டி 

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் காந்தி டாக்ஸ். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசனமே இல்லாமல் முழுக்க முழுக்க மெளனப் படமாக உருவாகியுள்ளதே காந்தி டாக்ஸ் படத்தின் சிறப்பு. இப்படத்திற்காக தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்கு  விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் பேட்டி அளித்தனர். இந்த நேர்காணலில் வசனங்கள் இல்லாமல் நடிப்பதால் முகத்தில் ரியாக்‌ஷன்களை வலுக்கட்டாயமாக காட்டவேண்டிய சூழல் ஏற்பட்டதா என பேட்டியாளர் கேள்வி எழுப்பினார். 

ரூடாக பேசிய விஜய் சேதுபதி 

இந்த கேள்விக்கு விஜய் சேதுபதி " நான் எந்த படத்திற்கும் திட்டமிட்டு நடிக்க செல்வதில்லை. எந்த வித ஐடியாவும் இல்லாமல் ஒரு படத்தின் செட்டிற்கு செல்கிறேன். அந்த காட்சிக்கு ஏற்ற மனநிலையில் இருந்தே நான் நடிக்க முயல்கிறேன். நான் நடிப்பது மிக எளிமையாக தெரியலாம் ஆனால் என் நடிப்பு வெளியே தெரியாமல் இருக்க நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். நான் நடிப்பது வெளியே தெரிந்துவிட்டால் நால் பலவீனமானவனாக ஆகிவிடுகிறேன். எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் என்னால் அதற்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொள்ள முடியும் " என்று விஜய் சேதுபதி கூறினார். 

இதற்கு அந்த பேட்டியாளர் 'நீங்கள் தான் மிஸ்டர் வெர்சடைல் ஆச்சே' என்று கூற அதற்கு விஜய் சேதுபதி விஜய் சேதுபதி கடுமையாக எனக்கு எந்த லேபிளும் தேவையில்லை என்று கடுமையாக பதிலளித்தார். பாராட்டும் விதமாகவே தான் அப்படி சொன்னதாக அந்த பேட்டியாளர் அவருக்கு விளக்கினார்.  அருகில் இருந்த நடிகை அதிதி ராவ் ஹைதரியும் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டை ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறினார். 

ஆனால் தனக்கு எந்த விதமான பட்டமும் தேவையில்லை என்றும் தான் முடிந்த அளவிற்கு ஒரு கதையை கேட்டு அது தனக்கு பிடித்திருந்தால் அதில் நடிப்பதாகவும். அந்த படம் பணம் சம்பாதிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னால் முடிந்த அளவு நேர்மையாக அந்த கதையை எனது நடிப்பில் வழியாக கடத்த முயல்கிறேன். என் நடிப்பைப் பற்றிய பட்டங்கள் எனது நடிப்பை பாதிக்கின்றன. " என விஜய் சேதுபதி கூறினார். 

இந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி இவ்வளவு எரிச்சலாக பதிலளித்திருக்க தேவையில்லை என கூறி வருகிறார்கள். தன்னடக்கமாக இருக்கிறார் என்றாலும் அதை இவ்வளவு அகங்காரத்துடன் வெளிப்படுத்த தேவையில்லை என விஜய் சேதுபதி நடந்துகொண்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 

 

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: ”துணை முதலமச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Embed widget