மேலும் அறிய

Vikram movie: போடு.. தகிட தகிட! விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு! சூப்பர் சென்டிமெண்டுக்குள் கமல்!

படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபோக கமல்ஹாசனின் V சென்டிமெண்ட்படி விக்ரம் நிச்சயம் வெற்றிதான் என திரைத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்

விக்ரம்..

கமல்ஹாசன் நடிப்பில் வரும் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர்.வேறு வழியின்றி முடிச்சை அவிழ்த்த இயக்குநர் சூர்யாவும் நடித்துள்ளார் என தெரிவித்தார். 

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப படக்குழு விளம்பரத்தில் பட்டையைக் கிளப்பியது. உள்ளூர் ரயில் முதல் துபாய் புர்ஜ் கட்டியம் வரை எங்கு பார்த்தாலும் விக்ரம் எதிரொலித்தது. இந்நிலையில் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபோக கமல்ஹாசனின் V செண்டிமெண்ட்படி விக்ரம் நிச்சயம் வெற்றிதான் என திரைத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்


Vikram movie: போடு.. தகிட தகிட! விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு! சூப்பர் சென்டிமெண்டுக்குள் கமல்!

V சென்டிமெண்ட்

திரைத்துறையில் சிலர் செண்டிமெண்டாக சில விஷயங்களை பாலோ செய்வார்கள். குறிப்பிட்ட எழுத்திலேயே படத்தலைப்பை வைப்பது,  குறிப்பிட்ட கிழமையில் டீசர், ட்ரைலர் வெளியிடுவது என அவரவர்களுக்கு ஏற்றதுபோல செண்டிமெண்டும் மாறுபடும். சில நடிகர்கள் அப்படி ஏதும் பின்பற்றவில்லை என்றாலும் ரசிகர்களாகவே சில சென்டிமெண்டை உருவாக்கி விடுவார்கள்.அப்படி கமலுக்கு உருவான செண்டிமெண்ட் தான் V சென்டிமெண்ட்.


அதாவது V எழுத்தில் தொடங்கும் கமலின் திரைப்படங்கள் எல்லாமே இதுவரை படு ஜோராக பட்டையைக் கிளப்பிய படங்கள் தானாம்.

V வரிசையில் கமல்ஹாசனுக்கு வெளியான ஹிட் படங்கள்:

வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், விக்ரம், வெற்றிவிழா, விருமாண்டி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு,  விஸ்வரூபம் என இந்தப்பட்டியல் இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது விக்ரம் இணைகிறது. இதனால் நிச்சயம் விக்ரம் படமும் வெற்றிப்படமாக அமையும் என சினிமா ரசிகர்கள் மைபோட்டு பார்த்துள்ளனர்.


Vikram movie: போடு.. தகிட தகிட! விக்ரம் படத்துக்கு இப்படி ஒரு வாய்ப்பு! சூப்பர் சென்டிமெண்டுக்குள் கமல்!

கமல் கொடுக்கவுள்ள இன்ப அதிர்ச்சி..

பிரம்மாண்ட நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையரங்குகளில் திரையிடப்படுவது வழக்கம். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் விக்ரம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில், விக்ரம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியான அதிகாலை 4 மணி சிறப்புக்காட்சியை ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். பொதுவாக மிகப்பெரிய நடிகர்களான ரஜினி, கமல்ஹாசஜன், அஜீத் மற்றும் விஜய் ஆகியோர் தங்களது திரைப்படங்களை ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பதில்லை. அவர்கள் பிரத்யேக காட்சிகளாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினர் ரசிகர்களுடன் இணைந்தோ மட்டும் பார்த்து வருகின்றனர். இந்த சூழலில், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் விக்ரம் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை கமல்ஹாசன் ரசிகர்களுடன் பார்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget