மேலும் அறிய

Thumkeshwari : ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் “தும்கேஸ்வரி” பாடல்..அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோர் உருவாகியுள்ள படம் “பெடியா”. 

நடிகர் வருண் தவான் நடித்துள்ள பெடியா படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சனோன் ஆகியோர் உருவாகியுள்ள படம் “பெடியா”.  அமர் கௌஷிக் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் பெடியா படம் ஓநாய் மனிதர்களை பற்றிய கதையாகும். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அடர்ந்து காடுளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படமாக அமைந்துள்ளது. 

இந்த படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை டாப் கன் மேவ்ரிக், மோர்ட்டல் காம்பாட், காட்சிலா வெசஸ் காங் ஆகிய படங்களுக்கு பணியாற்றிய எம்பிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதனிடையே பெடியா படத்தின் முதல் பாடலான 'தும்கேஸ்வரி' தற்போது வெளியாகியுள்ளது.  கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் - கீர்த்தி சனோன் கூட்டணி பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

இந்த பாடலை பற்றி வருண் தவான் கூறுகையில், "இது போன்ற ஒரு உற்சாகமான பாடலுக்கு நடனமாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றும், நடனமாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட பாடல் இது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாடலின் இசையும் அதன் வரிகளும் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

அதேசமயம் இந்த பாடலுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஷ்ரத்தா கபூரும் நடனமாடியுள்ளார். இயக்குநர் அமர் கௌஷிக்கின் முந்தைய படமான 'ஸ்திரீ' யில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார் என்பதால் இவர் இப்பாடலில் மட்டும் தோன்றுகிறாரா அல்லது படத்திலும் வருகிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

பாடல் குறித்து கீர்த்தி சனோன் கூறுகையில், "தும்கேஸ்வரி” பாடலில் நான் மிகவும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் நடித்துள்ளேன். பல வருடங்களுக்கு பிறகு வருணுடன் இப்படத்தில் நடித்துள்ளதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள படம். இந்த அனுபவம் எப்போதும் என் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார்.   இப்பாடலை கார்த்திக் மற்றும் அனுஷா மணி பாடியுள்ளனர். 'தும்கேஸ்வரி' பாடலை கேட்ட பிறகு பெடியா படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற பாடல்களையும் கேட்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.   'பெடியா' நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.  

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget