அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
அஜித்தின் குடும்பத்தினர் அனிருத் இல்ல நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில், தேவா மறைவில் பங்கேற்காதது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித்குமார். இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு முக்கியமான அடித்தளம் இவரது ஆரம்ப கால திரைப்படங்களே ஆகும்.
தேவா மறைவிற்குச் செல்லாத அஜித் குடும்பம்:
இவரது ஆரம்ப கால திரைப்படங்கள் பலவற்றிற்கும் இசையமைப்பாளராக இருந்தவர் தேவா. ஆசை, காதல் கோட்டை, வாலி, முகவரி போன்ற பல படங்களுக்கும் இசையமைப்பாளராக இருந்தவர் தேவா.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காலமானார். ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபு, பிரசாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல உச்ச நட்சத்திர படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில், நடிகர் அஜித்குமார் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தேவா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.
சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினர் யாரும் நேரில் சென்று தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. மனோராமா உள்பட சில பிரபலங்களின் உயிரிழப்பிற்கு அஜித் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினாலும், சில பிரபலங்களின் மறைவிற்கு அவரோ, அவரது குடும்பத்தினரோ செல்லவில்லை. இந்த விஷயத்தில் அஜித்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நவராத்திரி விழாவிற்குச் சென்ற அஜித் மனைவி:
இதற்கான காரணம் என்னவென்று இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியாவிட்டாலும் பல காரணங்கள் கூறப்படுகிறது. தேவா மறைவிற்கு அஜித் வராததற்கு பலரும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த சூழலில், இசையமைப்பாளர் அனிருத் வீட்டில் நேற்று நவராத்திரி விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த, சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி பங்கேற்றிருந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.
குவியும் கண்டனங்கள்:
நவராத்திரி விழாவில் அஜித் குடும்பத்தினர் பங்கேற்றதற்கு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியிருந்தாலும், தேவா மறைவிற்கு நேரில் வராதது, இரங்கல் தெரிவிக்காததற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்குச் செல்லத் தெரிந்த அஜித் குடும்பத்தினருக்கு? தேவா மறைவிற்குச் செல்லத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் தற்போது வெளிநாட்டில் நடக்கும் கார் ரேஸிங்கில் மிகவும் பரபரப்பாக உள்ளார். மேலும், அடுத்த மாதம் அவர் நடிக்கும் டேர்டெவில் படத்தின் படப்பிடிப்புத் தொடங்க உள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். அவர் ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கியவர். டேர்டெவில் படத்தை அஜித்தே சொந்தமாக தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















