Bharath Kalyan: பிரபல சின்னத்திரை நடிகரின் மனைவி திடீர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்து சில மாதங்களாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரியா பேலியோ டயட்டை பின்பற்றியதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1960-70களில் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் கல்யாண் குமாரின் மகனான பரத் கல்யாண் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழிலும் சுள்ளான், வசீகரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிருங்காரம் என்ற தமிழ் படத்தில் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் யக்கா என்ற படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார்.
View this post on Instagram
சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ள பரத் கல்யாண் தற்போது பாரதி கண்ணம்மா, கனா காணும் காலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி பிரியதர்ஷினி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
View this post on Instagram
கடந்து சில மாதங்களாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரியா பேலியோ டயட்டை பின்பற்றியதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமான நிலையில் சில நாட்கள் கோமாவிலும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். 43 வயதில் பிரியா மரணமடைந்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் நாளை அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.