மேலும் அறிய
Advertisement
நடிகர் மாதவனுக்கு கொரோனா பாசிட்டிவ்.. நலமடைய பிரார்த்திக்கும் ரசிகர்கள்..
பிரபல நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாலிவுட்டில் அதிகமாகவே காணப்படுகிறது. தற்போது, பிரபல நடிகர் மாதவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்த மாதவன், குணமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மாதவன் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion