மேலும் அறிய

Fahadh Faasil : ஃபகத் பாசிலுக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. ஆடிஷனில் என்ன நடந்தது தெரியுமா?

Fahadh Fassil : ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க நடிகர் ஃபகத் பாசிலுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆடிஷன் கூட முடித்துவிட்டார். முடிவு என்ன தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். தன்னுடைய அசாத்தியமான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற ஃபகத் பாசில் இயக்குநர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடிக்க தயங்காத ஃபகத் பாசில் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களை எதார்த்தமான நடிப்பின் மூலம் மெருகேற்றுபவர். 

Fahadh Faasil : ஃபகத் பாசிலுக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. ஆடிஷனில் என்ன நடந்தது தெரியுமா?

ஹாலிவுட் வாய்ப்பு :

விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ள ஃபகத் பாசில் தற்போது மிகவும் பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஹாலிவுட் படம் ஒன்றுக்கு ஆடிஷன் செய்தது குறித்து தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஹாலிவுட் படத்துக்கு ஆடிஷன் செய்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார்.  

ஆடிஷனில் என்ன நடந்தது ?

படத்தின் பெயரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பற்றியோ எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் ஆடிஷன்  செய்வதற்காக  காட்சி ஒன்று கொடுக்கப்பட்டது என்பதை பற்றி மட்டும் கூறி இருந்தார். ஃபகத் பாசில் அந்த வாய்ப்பை ஏற்று கொண்டாரா இல்லையா என்பது குறித்த எந்த ஒரு தகவலும் அவரின் நெருங்கிய வட்டாரத்திற்கு கூட தெரியவில்லை. 

நடிகர் ஃபகத் பாசில் அவர் நடிக்கும் படத்தில் கேரக்டர் கொடுத்த பிறகு அதற்கு ஏற்றார்போல மட்டுமே நடிப்பார் என்றும் மற்றபடி நண்பர்கள் முன்னால் கூட நடித்து காட்ட மாட்டார். அவரை நடிக்க வைக்கவும் முடியாது  என்பது அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அறிந்த ஒரு விஷயம். அப்படி அவரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் அவர் நடிப்பதற்கான கூடுதல் விவரங்கள் வழங்கப்பட வேண்டும். திரைக்கதைக்கு ஏற்ப தயாரிப்பாளர்கள் அவருக்கு கொடுக்கும் கேரக்டரை  பொறுத்தே அவரின் நடிப்பு அடங்கும். இந்த சூழலில் அவர் எப்படி ஆடிஷனில் நடித்து காண்பித்தார் என்பது குழப்பமாக இருக்கிறது. 

வெற்றியின் உச்சத்தில் ஃபகத் : 

ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்த ஃபகத் பாசில் தற்போது வெற்றியின் உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் ஜீத்து மோகன் இயக்கத்தில் வெளியான 'ஆவேஷம்' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்ததுடன் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

Fahadh Faasil : ஃபகத் பாசிலுக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. ஆடிஷனில் என்ன நடந்தது தெரியுமா?


'ஆவேஷம்' ரங்கா :

'ஆவேஷம்' படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த கேங்ஸ்டராக நடித்து இருந்தார் ஃபகத் பாசில். ரங்கா கேரக்டருக்கு தேவையான ஸ்வாக் மற்றும் ஸ்டைல் கேரளா இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. அந்த கேரக்டருக்கு தேவையான பெரும்பாலான குணாதிசயங்களை ஃபகத் தான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த ப்ராஜெக்ட்ஸ் :

தற்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனை எதிர்த்து பன்வர் சிங் கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான 'வேட்டையன்' படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும் நஸ்லென் மற்றும் மமிதா நடிப்பில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற பிரேமலு படத்தின் இரண்டாவது பாகத்தை ஃபகத் பாசில் தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ஃபகத் பாசில் என கூறப்படுகிறது.   
 

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget