மேலும் அறிய

Ethirneechal Marimuthu: இயக்குநர் மாரிமுத்துவின் மரணத்தால் கண்ணீரில் திரையுலகினர் .. பிரபலங்கள் இரங்கல்...

”மாரிமுத்துவின் மரணச்செய்தி கேட்டு ஒரு கணம் தனது உடல் ஆடி அடங்கியதாகவும், தேனியில் நான் தான் திருமணம் செய்து வைத்தேன்”

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சரத்குமார், இயக்குநர் சுசீந்திரன், பிரசன்னா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் மாரிமுத்து. குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  நடிப்பு மட்டும் இல்லாமல் பிரசன்னா நடித்த‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த ஜெயிலர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இன்று காலை எதிர்நீச்சல் படத்துக்காக டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார் நேரில் சென்று மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

வைரமுத்து வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘ மாரிமுத்துவின் மரணச்செய்தி கேட்டு ஒரு கணம் தனது உடல் ஆடி அடங்கியதாகவும், தேனியில் நான் தான் திருமணம் செய்து வைத்தேன்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்து அண்ணனின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவருடன் இணைந்து ஜீவா படத்தில் பணியாற்றியுள்ளேன். அற்புதமான நடிகர் என உறுக்கமாக இறங்கல் பதிவு தெரிவித்துள்ளார். 

 

இயக்குநரும் நடிகருமான சசிகுமார், மாரிமுத்துவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் சாந்தனு மாரிமுத்துவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் பிரசன்னா வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “"நாங்கள் சகோதரர்களைப்போல இருந்தோம்" என குறிப்பிட்டுள்ளார். பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை மாரிமுத்து இயக்கி இருந்தார். சில நேரங்களில் வாழ்க்கை நம் தலையில் கல்லால் அடிக்கும் என மாரிமுத்துவின் மறைவுக்கு இயக்குநர் பாண்டிராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன், உங்களுடன் இருந்த தருணங்களை நினைவுபடுத்துவதாக டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget