மேலும் அறிய

Ethirneechal July 19 : சொத்து போச்சு... குணசேகரன் கெத்தும் போச்சு.. எதிர்நீச்சல் அதிரடி பாத்திருக்கீங்களா?

* உண்மையை ஆடிட்டர் உடைக்க அதிர்ச்சியில் குணசேகரன் குடும்பம் * அப்பத்தாவிடம் கதறும் ஜனனி நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய  எபிசோடில்  மிகவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. 

நேற்றைய எபிசோடில் நந்தினி குணசேகரனுக்கு கல்வெட்டு வைப்பது பற்றி பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் தர்ஷன் வந்து ஈஸ்வரியிடம் நான் எனது நண்பன் வீட்டுக்கு போய் வருகிறேன் என  சொல்கிறான் அதற்கு தர்ஷினி "நீ ஆம்பள பையன் ஏன் பர்மிஷன் எல்லாம் கேக்குற... போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே... அப்பா காலையில அவ்வளவு பேசும்போது நீ வேடிக்கை தானே பாத்துகிட்டு இருந்த" என்கிறாள். "நான் மட்டும் பேசி இருந்தா நிலைமை இன்னும் மோசமாக போயிருக்கும். அம்மா சொல்ற மாதிரி, அவர்கிட்ட இருக்குற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

அவர் இந்த சொசைட்டில  செல்வாக்கு உள்ள ஆள்தான்.. ஆனா நம்மளோட அம்மா தான் நம்முடைய பெருமை... இத்தனை நாள் இது எனக்கு புரியல. அம்மா என்னோட காலேஜ் வந்ததுக்கு அப்புறம்தான் புரிந்தது" என்கிறான் தர்ஷன். 

Ethirneechal July 19 : சொத்து போச்சு... குணசேகரன் கெத்தும் போச்சு.. எதிர்நீச்சல் அதிரடி பாத்திருக்கீங்களா?

ஜனனி தர்ஷனை பாராட்டுகிறாள். இதுதான் உண்மையான மாற்றம். அவங்கள போல எல்லா விஷயத்துக்கும் கத்தக்கூடாது. எங்க பேசணுமோ அங்க பேசுறது எவ்வளவு முக்கியமோ அதேபோல சில இடத்துல பேசாம இருக்குறதும் நல்லது தான் என்கிறாள்.

நமக்கு எப்படி நம்மளோட அம்மாக்கள் சப்போர்ட்டாக இருக்குறாங்களோ அதே போல நாமளும் நம்ம அம்மாக்களுக்கு சப்போர்ட்டாக இருக்கணும் என அனைத்து குழந்தைகளும் அவர்களின் ஆதரவை தெரிவிக்க அனைவரும் பூரிக்கிறார்கள். ரேணுகா உடனே வாங்க எல்லாருக்கும் சுத்தி போடுகிறேன் என திருஷ்டி கழிக்கிறாள். ”இனிமே எல்லாமே நல்லதுதான் நடக்கும்” என்கிறாள் .

குணசேகரன் இன்னைக்கு ஷேர் பத்தின ரிசல்ட் வரப்போகிறது என்பதால் மிகவும் டென்ஷனாக இருக்கிறார். அந்த சமயத்தில் கரிகாலன் வந்து என்னையும் ஆதிரையும் எங்களோட வீட்டுக்கு அனுப்பி வைச்சுருங்க என சொல்கிறான். கதிர் ஆதிரையை அழைக்க கேட்காதது போலவே அனைவரும் இருக்கிறார்கள். கீழே இறங்கி வந்து ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறான். ஆதிரை கரிகாலனிடம் கொஞ்சி பேசுவது போல நடிக்கிறாள். "இங்க எல்லா முன்னாடியும்  ஆசையா கரிகாலன்னு கூப்பிடுவ ரூமுக்குள்ள போன உடனே மூஞ்சுல கரியைப்யை பூசுவ" என்கிறான்.

ஞானம் கரிகாலனை பார்த்து சத்தம் போட "மாமா உங்க பொண்டாட்டி அவங்களோட பழைய காதலன் கிட்ட உங்கள கூட்டிப்போக சொன்னா என்ன பண்ணுவீங்க. அருணை பார்க்கணும் என்னை கூட்டிட்டு போன்னு நேத்து சொல்றா" என்கிறான் கரிகாலன். கதிர் ஆதிரையை இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி மரியாதையா உன்னோட மாமியார் வீட்டுக்கு போய் வாழற வழி பாரு என்கிறான். 

 

Ethirneechal July 19 : சொத்து போச்சு... குணசேகரன் கெத்தும் போச்சு.. எதிர்நீச்சல் அதிரடி பாத்திருக்கீங்களா?


அந்த நேரம் பார்த்து பரபரப்பாக ஆடிட்டர் வந்து மொத்த சொத்தும் போச்சு என குணசேகரனிடம் சொல்கிறார். ஒன்றும் புரியாமல் குணசேகரன் சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லுங்க என்கிறார். உங்களோட மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனியில் யார் யாரோ நுழைந்து உங்களின் ஸ்டாஃப்களை வெளியே அனுப்பி விட்டார்கள் என்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கவர்மெண்ட் சீல் வைச்சுடுச்சா என கேட்கிறார். இல்லை ஜீவானந்தம் என்ற ஒருவர் வந்து இது இனிமே என்னுடைய ஆபிஸ் என்கிறான் என சொல்கிறார் ஆடிட்டர். யார் இந்த ஜீவனானந்தம் இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என புலம்பிக்கொண்டே அவர்கள் அனைவரும் காரில் ஏறி வேகவேகமாக செல்கிறார்கள். 

ஜீவானந்தம் பெயரை கேட்ட ஜனனியும், சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். வேகவேகமாக ஜனனி அப்பத்தாவின் ரூமுக்கு  சென்று "எந்திரிங்க அப்பத்தா. யாரு அந்த ஜீவானந்தம். உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?? அவன் ஏன் நம்ம சொத்த ஆக்ரமிக்கணும்?? நீங்க ஏன் அந்த பெயரை என்கிட்டே சொன்னீங்க. சொல்லுங்க சொல்லுங்க" என அழுகிறாள். அனைவரும் அவளை வெளியே அழைத்து வருகிறார்கள். 

Ethirneechal July 19 : சொத்து போச்சு... குணசேகரன் கெத்தும் போச்சு.. எதிர்நீச்சல் அதிரடி பாத்திருக்கீங்களா?

"அப்பத்தாவுக்கும், ஜீவானந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட புருஷன்தான் டிராமா போடுறார். ஜீவானந்தம் என்பவன் மூலம் சொத்து அனைத்தையும்  அபகரிக்க பிளான் போட்டு இதை செய்துள்ளார். அதனால் தான் நாம ஜீவானந்தம் நம்பருக்கு எத்தனை முறை முயற்சி செய்தும் அவன் எடுத்து பேசவில்லை. இது எல்லாமே அவரோட பிளான்" என ஈஸ்வரி ஜனனியிடம் சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

உண்மையில் குணசேகரன் ஏமாந்தது தெரியாமல் இவர்கள் அவர் மீது சந்தேகப்படுகிறார்கள். ஜீவானந்தம் - குணசேகரன் மீட்டிங் எபிசோட் இன்று இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மிகவும் பரபரப்பாக நகர்ந்து வரும் இந்த சீரியலின் அடுத்தடுத்த திருப்பங்கள் என்னவாக இருக்கும் என மிகவும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Tata Aeris Variants: ‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
‘Tough Guy'-ஆக வந்த டாடா ஏரிஸ் வாங்க பிளான் இருக்கா.? அப்போ அதோட வேரியண்ட்டுகள தெரிஞ்சுக்கோங்க
Embed widget