லியோ’விலும் அடியெடுத்து வைக்கும் ரோலக்ஸ்.. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் லோகேஷ்.. எப்படி தெரியுமா?


மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படமானது வருகின்ற அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது. ’விக்ரம்’திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் LCU-க்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 15ம் தேதி க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. மேலும் படிக்க


“உண்மையை கேட்ககூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” - மாமன்னன் 50வது நாளில் மாரி செல்வராஜ்


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.  இயக்குநர் மாரி செல்வராஜ் என்றாலே நேர்த்தியான கதை, அதற்கேற்ப திரைக்கதை, கூர்மையான காட்சிகள் அதையொட்டிய வசனங்கள் என தனது முதல் படம் முதல் அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள மூன்று படங்களிலும் தமிழ் சினிமாவில் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கக்கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளவர். மேலும் படிக்க


ஈ.சி.ஆரில் இசை கச்சேரி.. மீண்டும் தேதி குறித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. வருண பகவான் வழிவிடுவாரா?


சென்னையில் நடைபெறவிருந்தாக இருந்து ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி  மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் படங்களில் இசையமைப்பதை தாண்டி, உலகமெங்கும் தனது இசைக் கச்சேரிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார். மேலும் படிக்க


சித்திக் குடும்பத்துக்கு லேட்டாக இரங்கல் தெரிவித்த விஜய்... காரணம் இதுதான்!


ப்ரெண்ட்ஸ் , காவலன் படங்களின்  இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தாகவும், நேரில் செல்ல முடியாததற்கு வருந்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கரியரில் முக்கிய வெற்றிப் படங்களாக அமைந்த திரைப்படங்கள், ப்ரெண்ட்ஸ், காவலன். இந்தப் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் சித்திக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும் படிக்க


ஜெயிலர் பாத்துட்டீங்களா?.. இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னன்னு பாருங்க..!


ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் களைக்கட்டும் என்பது உறுதி . ஒரு வேளை ஜெயிலர் படத்தை நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாக பார்த்துவிட்ட வேறு புதிய படங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் , இணையத் தொடர்களின் பட்டியல் இதோ. மேலும் படிக்க


வழக்கமான கதையில் வித்தியாசமான முயற்சி.. பாராட்டுக்களை அள்ளும் அபிஷேக் பச்சனின் கூமர்..


அபிஷேக் பச்சன் நடித்து ஆர். பால்கி இயக்கியிருக்கும் கூமர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்துவிட்ட ரசிகர்கள் ட்விட்டரில் என்ன மாதிரியான விமர்சனங்களை தெரிவித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். சீனே கம், பா, ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கூமர். மேலும் படிக்க


‘காமெடி கதை பண்ணுங்க .. ஒரே ரூட்ல போகாதீங்க’ .. மாரி செல்வராஜூக்கு வடிவேலு அட்வைஸ்..!


மாமன்னன் படம் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி வெளியானது. வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும்  நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். வட மாவட்ட அரசியலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க


தேன்மொழி பூங்கொடி வாடிப்போச்சே என் செடி.. ஓராண்டை நிறைவு செய்யும் திருச்சிற்றம்பலம்


மித்ரன் கே ஜவகர் இயக்கத்தில் தனுஷ் , பிரகாஷ் , பாரதிராஜா,  நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது திருச்சிற்றம்பலம். அவ்வப்போது தனுஷ் நடிக்கும் ஒரு சுமாரான படங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்பதுதான் திருச்சிற்றம்பலம் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் ஏன் இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்த பெரும்பான்மையான ரசிகர்களின் மனப்பான்மையாக இருந்தது.  மேலும் படிக்க