AR Rahman: ஈ.சி.ஆரில் இசை கச்சேரி.. மீண்டும் தேதி குறித்த ஏ.ஆர்.ரஹ்மான்.. வருண பகவான் வழிவிடுவாரா?

சென்னையில் நடைபெறவிருந்தாக இருந்து ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி  மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னையில் நடைபெறவிருந்தாக இருந்து ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி  மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர் படங்களில் இசையமைப்பதை தாண்டி, உலகமெங்கும் தனது இசைக் கச்சேரிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சி என்றால் அதற்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீரும் அளவுக்கு மிகப்பெரிய ஆவலுடன் ரசிகர்கள் காத்து கிடப்பார்கள்.

அப்படியான நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார். இதற்கு 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இதற்காக  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கவிருந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. 

 குறுக்கே வந்த மழை

இசைக்கச்சேரி நாளான ஆகஸ்ட் 12 ஆம் தேதி பனையூரை நோக்கி ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலை நிரம்பி வழிந்தது. இப்படியான நிலையில் அன்றைய தினம் மதியம் திடீரென வானிலை மாறி மழை கொட்ட தொடங்கியது. இதனால் விழா நடைபெறும் மைதானத்தில் மழைநீர் சூழ்ந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மழை, போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே பனையூர் வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் 

இதனிடையே உடனடியாக ரசிகர்கள் தங்கள் ஏமாற்றங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அனைத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் விடுத்த கோரிக்கை ஒன்றுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ பெரிய இசை கச்சேரிகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள்  நடத்த ஏதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் ‘கலைஞர் கன்வென்ஷன் சென்டர்’ உலகத்தரத்தில் விரைவில் அமையவுள்ளது’ என தெரிவித்தார்.

மீண்டும் இசைக்கச்சேரி 

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது மழை பெய்யக்கூடாது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola