ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் களைக்கட்டும் என்பது உறுதி . ஒரு வேளை ஜெயிலர் படத்தை நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாக பார்த்துவிட்ட வேறு புதிய படங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் , இணையத் தொடர்களின் பட்டியல் இதோ.

மத்தகம்


கிடாரி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் முருகசேன் இயக்கியிருக்கும் முதல் இணையத் தொடர் மத்தகம். அதர்வா , மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஹாட்ஸ்டாரின் வெளியாக இருக்கிறது.



கன்ஸ் &  குலாப்ஸ்



துல்கர் சல்மானை  நாம் திரையில் பார்த்து கிட்டதட்ட ஓராண்டு காலம் ஆகின்றன. அவர் நடித்திருக்கும் கிங் ஆஃப் கோதா படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்திருக்கும் கன்ஸ் & குலாப்ஸ் என்கிற இணையத் தொடர் வருகின்ற 18 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியிருக்கும் இந்தத் தொடரில் ராஜ்குமார் ராவ், துல்கர் சல்மான், ஆதர்ஷ் கெளரவ், கெளதம் ஷர்மா, கெளரவ் ஷர்மா மற்றும் குல்ஷன் தேவையா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இணையத் தொடர் ஒன்றில் துல்கர் சல்மான் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


கொலை



பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ’கொலை’. கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானது. தற்போது வருகின்ற ஆக்ஸட் 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது கொலைத் திரைப்படம்.


தாலி



மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் திரு நங்கைகளுக்கான உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் ஸ்ரீகெளரி சாவந்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தொடர் தாலி. பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென் இந்தத் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கிறது தாலி.


மாஸ்க் கெர்ல்



மாஸ்க் கெர்ல் என்கிற இணையத் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. கோ ஹியூன் யுங் , நானா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்