- CM Stalin: அப்படிபோடு...! மீனவர்கள் மாநாட்டில் முத்தான 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 10 அறிவிப்புகள் மூலம் 2,77,347 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- ADMK Case: அதிமுக விதிகள் மாற்றம்: ’நீதிமன்ற தீர்ப்பே இறுதி முடிவு'...எடப்பாடி பழனிசாமி தான்...தேர்தல் ஆணையம் பரபர தகவல்!
அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையிலான அதிமுக கட்சி தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் இறுதி முடிவு என்பதையும் தாங்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் படிக்க
- Tenkasi 144: தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன் தெரியுமா? முழு விவரம்..
தென்காசி மாவட்டத்தில் 18.08.23 மாலை 6 மணி முதல் 21.08.23 காலை 8 மணி வரையும் அடுத்ததாக 30.08.23 மாலை 6 மணி முதல் 02.09.23 காலை 10 மணி வரையிலும் என 8 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரனின் 252 வீர வணக்க நாள் வரும் 20.08.23 அன்று நடபெற உள்ளதால் அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்துக்கொள்வார்கள். மேலும் படிக்க
- CM Stalin: மீனவர்களுக்காக இதுவரை திமுக செய்தது என்ன? - ராமநாதபுரத்தில் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. மேலும் படிக்க
- Governor Ravi Delhi Visit: விஸ்வரூபம் எடுக்கும் நீட் விவகாரம்.. டெல்லி பறந்த ஆளுநர் ஆர்.என். ரவி.. 3 நாள் பயணத் திட்டம் என்ன?
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நிட் தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இந்த சூழலில் ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க