மேலும் அறிய

கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் மற்றும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி எனப் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களும் அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் படத்தின் கதைக்களத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன.

நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி நாயர், நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த தீவிரமான கருத்துகளையும் பொழுதுபோக்கு பாணியில் இப்படம் பேசுவதாகத் தெரிவித்தார். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படமாக இது இருக்கும் என்றும் கூறினார். மேலும், வழக்கமான சினிமா பாணியைத் தாண்டிய புதிய முயற்சிகள் தமிழில் தொடர்ந்து உருவாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகை சித்தி இத்னானி பேசும்போது, புதிய கலைஞர்களை நம்பி தயாரிப்பாளர் முதலீடு செய்துள்ள நிலையில், சிறிய திரைப்படங்களுக்கு ஊடகங்களும் ரசிகர்களும் ஆதரவு அளிப்பது அவசியம் என்றார். நடிகர் டிராவிட் செல்வம், இப்படத்தில் ஹாரர், நகைச்சுவை மற்றும் அரசியல் கருத்துகள் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சினிமாவாலா சதீஷ் மற்றும் ஆர்.ஜே. தீபக் ஆகியோரும் படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். GM Morgan Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். வித்தியாசமான கற்பனைக் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
"சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை" - தமிழக அரசு மீது திமுக கடும் தாக்கு!
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
முன்னாள் காதலிக்கு எத்தனை காதலர்கள்? 1,886 கேள்விகள் கேட்ட விழுப்புரம் இளைஞர்!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget