Don Movie Update: மழையோ புயலோ ஒன்றும் செய்யாது... அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசிய சிவகார்த்திகேயன்
கொட்டும் மழையிலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு டப்பிங் பேசியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். அவரது வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைத்தது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அதிர்ஷ்டம் என்பதை தாண்டி திறமையால் வந்தது.
அவருடைய நீண்ட கால நண்பரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் சமீபத்தில் நடித்த டாக்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.
25 days of this vera maari BLOCKBUSTER making you laugh, clap & cheer!
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
We're happy to declare that #Doctor has officially grossed 100 Crores in Theatrical 🎊🎉🥳#DOCTORHits100Crs
This victory is yours as much as ours ❤️ pic.twitter.com/kMdCJk97fk
இதன் மூலம் அவர் கோலிவுட்டில் 100 கோடி க்ளப்பில் இணைந்தார். குறிப்பாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேய்னின் பாடி லாங்குவேஜும், டயலாக் டெலிவிரியும் குறிப்பிடும்படி இருந்தது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாக்டர் வெளியாகி டாப் 10 ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
😊🙏❤️ #Doctor https://t.co/E7PoF8JbSF
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) November 2, 2021
டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்துவருகிறார். லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அடாது மழையிலும் விடாது டப்பிங்💪💪👍Completed my dubbing for #DON 😎
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 9, 2021
Lots of emotions,revisited my college days,Loved this journey❤️❤️ pic.twitter.com/WJS3rloBpX
இந்நிலையில் படத்துக்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. அதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடாது மழையில் விடாது டப்பிங் பேசி ‘டான்’ படத்தின் டப்பிங்கை முடித்தேன். நிறைய உணர்வுப்பூர்வமாகப் பேசினேன்.
டப்பிங் பேசும்போது எனது கல்லூரி நாட்களை மீண்டும் பார்த்தேன். இந்தப் பயணத்தை நிறைய ரசித்தேன்” என்று டப்பிங் பேசும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்