மேலும் அறிய

Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார் என தேவாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின.

இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. 

நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவாவை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா, மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா. தேவா மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

10 ஆண்டு காதல்..காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்..யார் இந்த ராஜவேல்?
10 ஆண்டு காதல்..காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்..யார் இந்த ராஜவேல்?
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சின்ன மாமியாரை சிக்க வைத்த கார்த்திக்.. தயங்கி தயங்கி வீட்டிற்கு வந்த மாமியார்! கார்த்திகை தீபத்தில் இன்று
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ பட பத்திரிகையாளர் சந்திப்பு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் வீராவி கதாபாத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
TN Govt: தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
தமிழ்நாட்டில் என்ன தான் நடக்குது? ஆளுநரிடம் விரிவான ரிப்போர்ட் கேட்ட மத்திய அரசு - தயாராகும் BJP?
Embed widget