மேலும் அறிய

Vignesh Shivan: ”என் கனவு பிறந்தநாள்”..புர்ஜ் கலிஃபாவில் வாவ்.. நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்...!

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படம் பெரிய ஹிட் கொடுத்தது. இப்படமே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த இடமாகவும் அமைந்தது. 

இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

பெற்றோர்கள் காவல்துறையை சேர்ந்த நிலையில், நடிகராகும் ஆசையில் சிவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரீ ஆனார் விக்னேஷ் சிவன். ஆனால் காலம் அவரை இயக்குநராக்கி அழகு பார்த்தது. சிம்பு, வரலட்சுமி நடித்த “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். விஜய்யின் துப்பாக்கிக்கு எதிராக ரிலீசான போதும் கலவையான விமர்சனங்களையே அப்படம் பெற்றது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன கேரக்டரில் வந்த விக்னேஷ் சிவன், அதன் மூலம் தனுஷூடன் ஏற்பட்ட நட்பின் மூலம், அவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் கீழ் “நானும் ரௌடி தான்” படத்தை எடுத்தார்.விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இப்படமே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த இடமாகவும் அமைந்தது. 

அடுத்ததாக சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகளில் ஒரு எபிசோடு, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய 5 படங்களை மட்டுமே இந்த 10 வருடத்தில் இயக்கியுள்ளார். அதேசமயம் பாடலாசிரியராக  வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, ரெமோ, கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, தானா சேர்ந்த கூட்டம், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார். 

இதற்கிடையில் 7 வருட காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, நயன்தாராவை இந்தாண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின் பல இடங்களுக்கு டூர் சென்ற இந்த ஜோடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்வித்தனர். 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் மனைவி நயன்தாராவுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அனைவரும் அவர் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், துபாயில் உள்ள பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே தனது பிறந்தநாளை நயன்தாரா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ கொண்டாடியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், அன்பான குடும்பத்தினரோடு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் மனைவியால் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்.  புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான உறவுகளோடு நடந்த  ஒரு கனவு பிறந்தநாள். இதை விட சிறப்பாகவும் சிறப்பாகவும் பெற முடியாது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்குக் கொடுக்கும் அனைத்து அழகான தருணங்களுக்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி!  என தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2 ott release : ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Jailer 2 ott release : ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
அப்போது நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..தாமிரபரணி பட நடிகை முக்தா அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
Embed widget