மேலும் அறிய

Rajinikanth Baba Re Release: ரஜினியின் திடீர் அழைப்பு..பாபா படம் ரீ-ரிலீஸ்; காரணத்தை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா!

அவதார் பாபாஜியை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்ட நிலையில், ரஜினிக்கும் பாபாஜிக்குமான ஆன்மீக தொடர்பை ரசிகர்கள் முன்பே நன்கு அறிந்திருந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய என்ன காரணம் என்பதை அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா படம் வெளியானது. இந்த படத்தில் மனீஷா கொய்ராலா ஹீரோயினாக நடிக்க,கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ்., ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்திருந்தனர். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. ரஜினியே இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருந்தார். 

அவதார் பாபாஜியை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்ட நிலையில்,  ரஜினிக்கும் பாபாஜிக்குமான ஆன்மீக தொடர்பை ரசிகர்கள் முன்பே நன்கு அறிந்திருந்தனர். அதனால் பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால்  நஷ்டம் அடைந்த விநியோகதஸ்தர்களுக்கும், தியேட்டர் ஓனர்களுக்கு ரஜினி நஷ்டஈடு வழங்கினார். அதேபோல பாபா படத்தால் பாமகவுக்கும் - ரஜினிக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் இன்றளவும் பாபா படத்தை நினைத்தாலே இத்தகைய சம்பவங்கள் கண்முன்னே வந்து செல்வது நிச்சயம். 

இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சமீபத்தில் பாபா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுக்க முழுக்க பாபா படம் பற்றிய பேச்சு தான் உள்ளது. யூடியூப், ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் என எதிலும் இடம்பெறாத பாபா படம் ஏன் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பதை அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். 

இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேசிய சுரேஷ் கிருஷ்ணா, “ 10 நாட்களுக்கு முன்பு ரஜினி எனக்கு போன் செய்தார். நான் பாபா படத்தின் ஹார்ட் டிஸ்க் அனுப்புறேன் பாருங்க என சொன்னார். நானும் பதில் எதுவும் சொல்லாமல், திரும்பவும் நான் முழுவதுமாக பார்த்தேன். பின் 2 நாட்கள் கழித்து என்னை பார்த்து எப்படி இருந்துச்சு படம் என ரஜினி கேட்க, நான் அப்பவே பிடிச்ச படம் சார் என சொன்னேன். இப்படத்தை நான் ரீ-ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். நான் சூப்பர் ஐடியா என தெரிவித்தேன். 

அப்போது சுரேஷ் நீங்க ஒன்னு கவனிச்சீங்களா என ரஜினி கேட்டார். சமீபகாலமாக பேன்டசி படம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற பேன்டசி படங்களை சொல்லலாம். 2கே கிட்ஸ் தலைமுறையினர் இப்படத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். 20 வருஷத்துக்கு முன்னாடி இப்படியான ஒரு பேன்டசி கதையை பண்ணுவதே அபூர்வமான நிலையில் நாங்கள் முயற்சித்தோம். கண்டிப்பா இப்ப பார்த்த புது வெர்ஷனா இருக்கும் என சொன்னேன். 

3 மணி நேரம் ஓடக்கூடிய பாபா படம் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தற்போதைய தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எந்த தப்புமே இல்லை.ஆனால் அன்றைக்கு எழுந்த சர்ச்சைகளால் உரிய அங்கீகாரம் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இப்ப பாபா படம் ரிலீஸ் செய்தால் நிச்சயம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும்” என சுரேஷ் கிருஷ்ணா அந்த நேர்காணலில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
Embed widget