மேலும் அறிய

Selvaraghavan Tweet | மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் செல்வராகவன் ட்வீட்! : இந்த முறை தனுஷா.. வேலையைக்காட்டிய நெட்டிசன்கள்

“இன்னொருவர் நன்றாக இருக்கக்கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !!”

திரைப்பிலபங்கள் பதிவிடும் கருத்துகள் சமயத்தில் அவர்களுக்கே வினையாகிவிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து , அவருக்கு விவாகரத்தாக போகிறது என்ற பகீர் வதந்திகளை கிளப்பிவிட்டது. அதாவது ”இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.” என குறிப்பிட்டிருந்தார்.  

உடனே நெட்டிசன்கள் தனது மனைவியை குறித்துதான் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார் போலும், ஒருவேளை விவாகரத்திற்கு தயாராகிவிட்டாரோ என சரமாரியாக பேச தொடங்கிவிட்டனர். அதன் பிறகு நமது எபிபி நாடு சேனலுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளித்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி , நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், வதந்திகளை பரப்பாதீர்கள் என அவருக்கான பாணியில் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !!” என குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழாக நெட்டிசன்கள் மீண்டும் கிசு கிசுக்க தொடங்கிவிட்டனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது தம்பியான தனுஷிற்கு மறைமுகமாக செல்வராகவன் அறிவுரை கூறுகிறார் என நெட்டிசன்கள் மீண்டும் தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர். செல்வராகவன் இது போன்ற  தத்துவ பதிவுகளை  ஷேர் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் , அதனை வேறு மாதிரியாக ட்விஸ்ட் செய்வதே டிவிட்டர்வாசிகளுக்கு வழக்கமாகிவிட்டது. 

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் ‘ராயன்’  என்ற திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.செல்வராகவனின் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தில்  தனுஷ் நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதற்குள் தனுஷை வைத்து இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார். சில காரணங்களால் படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் தாணு, செல்வராகவனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைப்பு மட்டுமின்றி கதைக்களத்திலும் பல மாற்றங்களுடன் ’ராயன்’ என்ற தலைப்பில் அந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. செல்வராகவன் தற்போது சாணிகாயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அதே போல விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Thar Roxx: செப்.22 சந்தைக்கு வரும் 3 டோர் சிங்கம்..! மஹிந்த்ரா ஆஃப்-ரோடரின் அம்சங்கள், வசதிகள், விலை விவரம்
செப்.22 சந்தைக்கு வரும் 3 டோர் சிங்கம்..! மஹிந்த்ரா ஆஃப்-ரோடரின் அம்சங்கள், வசதிகள், விலை விவரம்
Embed widget