மேலும் அறிய

தனுஷ் படத்திற்கு 'ஓம்' டைட்டில் வைத்த காரணம் என்ன?இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 

தனுஷின் 55 ஆவது படமாக உருவாகிறது ஓம். அமரன் படத்தைத் தொடர்ந்துர் ராஜ்குமார் பெரியராமி மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை இயக்குகிறார். மம்மூட்டி , சாய் பல்லவி , ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். சிவ பக்தரான தனுஷ் தனது இஷ்ட தெய்வத்தையே இந்த படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார் . ஓம் பட டைட்டில் காரணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார் 

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியபோது

“இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்விலிருந்து நடிகர், நடிகைகள் தேர்வு வரை, தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல், ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. ஒளிப்பதிவாளர், கேமரா குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.  ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.

இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.

அக்டோபர் 16 இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான அம்சங்களும், பல்வேறு அடுக்குகளும் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”

Advertisement

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget