மேலும் அறிய

Prabhu Solomon: கைதி போல வர வேண்டிய படம்.. மிஸ்ஸான சான்ஸ்.. பிரபு சாலமன் பகிரும் உண்மை!

கரண் படத்தை நான் பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம் என நினைத்தேன். அப்படி எடுத்திருந்தால் இன்னைக்கு பாடல்கள் இல்லாத ஒரு படம் என கைதியை கொண்டாடுவது போல அன்றைக்கு கொண்டாடியிருப்பார்கள்.

கைதி படம் போல வர வேண்டிய தன்னுடைய படம் எப்படி தடம் மாறியது என்பதை இயக்குநர் பிரபு சாலமன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, லாடம், மைனா, கும்கி, கயல், தொடரி, செம்பி, கும்கி 2 ஆகிய படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். காதல் கதையை வித்யாசமான கோணத்தில் சொன்ன அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் பிரபு சாலமன் 2006ம் ஆண்டு கொக்கி என்ற படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வந்த கரண் முதல்முறையாக ஹீரோ வேடம் ஏற்ற நிலையில் அப்படம் வெற்றி பெற்றது. இதில் ஹீரோயினாக பூஜா காந்தி நடித்திருந்தார். தினா இசையமைத்திருந்தார். 

இந்த நிலையில் நேர்காணலில் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரபு சாலமன், “எனக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்த படம் என்னவென்று கேட்டால் அது “கொக்கி”. அந்த படம் 2006ம் ஆண்டு வெளியானது. வெறும் கேமரா மற்றும் ஃபிலிம் ரோல் கொடுங்க. நான் படம் எடுத்து காட்டுகிறேன் என சொல்லி இயக்கிய படம் அது. அந்த படத்தில் தான் என் பெயர் பிரபுசாலமன் என இடம் பெற்றிருந்தது. அது என்னுடைய முதல் படம் என சொல்லலாம். அந்த படம் எனக்கு சினிமா பாதையை திறந்து விட்ட படமாக அமைந்தது. 

கொக்கி படத்தை நான் பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம் என நினைத்தேன். அப்படி எடுத்திருந்தால் இன்னைக்கு பாடல்கள் இல்லாத ஒரு படம் என கைதியை கொண்டாடுவது போல அன்றைக்கு கொண்டாடியிருப்பார்கள். கொக்கி படத்தின் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு கமர்ஷியலாக பாடல்கள் வேண்டும், ஹீரோயின் இருக்க வேண்டும் என கூறினார்கள். இல்லாவிட்டால் ஹீரோயினே இல்லாமல் ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். 

ஒரு சாதாரண மனிதன், அசாதாரண சூழ்நிலையில் சிக்கிக் கொள்வது படத்தின் கதை. கரண் எனக்கு கோகுலத்தில் சீதை படத்தின் மூலம் பழக்கம் என்பதால் அவரிடம் ஃப்ரீயா ஒருத்தர் வேண்டும் என சொன்னேன். அதற்கு கரண் நாம இந்த படம் பண்ணலாம் என கூறினார். ரொம்ப எளிதான பட்ஜெட் போட்டு கொடுத்ததை யாருமே நம்பவில்லை. ஃபிலிம் இருக்கும் காலத்திலேயே லைட் இல்லாமல் படமெடுத்தேன். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி செலவு ரூ.75 லட்சம் தான். அந்த படம் என்னை உயர்த்தி விட்டது” என தெரிவித்துள்ளார். பிரபு சாலமன் அடுத்ததாக மாம்போ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Embed widget