மேலும் அறிய

Director Perarasu: 'ரூபாய் 1000 வேண்டாம்.. பேருந்தில் இலவசம் வேண்டாம்..' - தி.மு.க. அரசை விமர்சித்த இயக்குனர் பேரரசு

"எதிர்கட்சியாக இருக்கும் போது மதுவுக்கு எதிரான குரல் இருக்கிறது. ஆளுங்கட்சி ஆன பின் அந்த குரலையே காணோம். 1000 ரூபாய் பெண்களுக்கு வேண்டாம். பேருந்தில் ஓசி வேண்டாம்" - இயக்குநர் பேரரசு

இலவசம் என்ற ஒன்று எங்களுக்கு தேவையில்லை‌ என்றும், 1000 ரூபாய் பெண்களுக்கு வேண்டாம், பேருந்தில் ஓசி வேண்டாம் என்றும் இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்

எதிர்கட்சியாக இருக்கும்போது மதுவுக்கு எதிரான குரல் இருக்கிறது, ஆளுங்கட்சி ஆன பின் அந்த குரலையே காணோம், யார் குரல்வளையை நெறிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் இயக்குநர் பேரரசு திமுகவை சாடியுள்ளார்.

வீரப்பன் மகள் அறிமுகம்

வீரப்பன் மகள் விஜயலட்சுமி - நடிகர் ராதாரவி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன் பிள்ளை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தப் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். 

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, இயக்குநர் பேரரசு, நடிகர் கூல் சுரேஷ், அனைத்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராஜேஷ்வரி ஆகியோர் கொண்டனர்.

அப்போது நடிகை விஜயலட்சுமி மேடையில் பேசியதாவது, "சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. 8ஆவது படிக்கும் போது வந்த வாய்ப்பு தவறவிட்டேன். வீரப்பன் எந்த ஒரு கெட்டப்பழக்கமும் இல்லாமல் மிகச்சிறந்த மனிதனாக இருந்து விட்டு போய் உள்ளார்‌.  சர்ச்சுக்கு போகும் இடத்தில் கூட பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு ஏற்படும் போது, அது மாதிரியான விழிப்புணர்வு படத்தில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன். தெருத்தெருவுக்கு டாஸ்மாக் கடை இருக்கு. குறைக்கிறேன் என்று கூறி அதுக்காக எந்த அடியும் எந்த அரசாங்கமும் எடுத்து வைக்கவில்லை.  வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” எனப் பேசினார்.

பேரரசு பேச்சு

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “வீரப்பன் மகள் விஜயலட்சுமி நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார்.  பெண்கள் இவ்வாறு பேச வேண்டும். பெண்கள் குரல் ஒலிக்க வேண்டிய காலகட்டம் இது.  பெண் விடுதலை பேச்சாகவே போய் கொண்டிருக்கிறது. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சமுதாய பொறுப்புடன் இந்த படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். வாழ்த்துகள். 

திரைப்படம் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இவர்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. சினிமா தாய் அனைவரையும் அரவணைக்கும். வீரப்பன் மகள் நடிக்கலாம். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு புதுமுக நடிகை. இது கலைத்துறை. 

தெருக்கூத்து என்றிருந்தது. அது அழிந்து கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.  எங்கள் விஜய், பிரபு தேவா ஆடுவதை விட குடிமகன்கள் ஆடும் ஆட்டம்அதிகம். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்துகிறார்கள். இதற்கு யார் காரணம்?

திமுகவை சாடிய பேரரசு

முன்பெல்லாம் தேர்தல் வரும் நேரத்தில் மதுவை ஒழிப்போம் என கூறி ஓட்டு கேட்பார்கள். ஆனால் இப்போது மது கொடுத்துவிட்டு தான் ஓட்டு கேட்கிறார்கள். மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்போம் என்கிறார்கள். மக்கள் தவறா, அரசாங்கம் தவறா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு உள்ளது.

எதிர்கட்சியாக இருக்கும் போது மதுவுக்கு எதிரான குரல் இருக்கிறது. ஆளுங்கட்சி ஆன பின் அந்த குரலையே காணோம். யார் குரல்வளையை நெறிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தற்போது கஞ்சா புழக்கம் ஜாஸ்தி ஆகி விட்டது. நாளை கஞ்சா கடை வையுங்கள் நாடு நாசமாக போகும். இதற்கு பொறுப்பு அரசாங்கம். மக்களுக்காக ஆட்சி செய்கிறீர்கள் என்றால் மக்களை நல்வழிபடுத்துங்கள்.

’1000 ரூபாய் வேண்டாம்’

ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டிய விசயம். அதை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் போது, சட்டசபையில் இதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. சட்டசபையில் இதற்காக குரல் கொடுங்கள் சார், அப்போது தான் உண்மையான அரசியல்வாதி. சாராயத்தில் அரசாங்கத்தை நடத்தும் கேவலமான செயல் எதுவும் இல்லை 

இலவசம் என்ற ஒன்று எங்களுக்கு தேவையில்லை‌. 1000 ரூபாய் பெண்களுக்கு வேண்டாம். பேருந்தில் ஓசி வேண்டாம். எங்களுக்கு தேவை மருத்துவம், கல்வி, நீட் ஒழிப்பது. அதற்கு முன் அவர்களுக்கு நீட் பயிற்சி கொடுங்கள்.

சாராயம் விற்ற காசில் எங்களுக்கு எதுவும் பண்ண வேண்டாம். ஏழைகளை போதைக்கு அடிமையாக்கி நாட்டை கூட்டிச்சுவராக்கிறீர்கள். யார் சாராயத்தை விற்கிறார்களோ அவன் மீது மலத்தை அள்ளி வீசுங்கள்.  பட்டியலினத்துக்காக குரல் கொடுப்போம் என கேட்கும் போதெல்லாம் நன்றாக இருந்தது. அரசியல்வாதிகளை திருத்த முடியாது சார். நாம் திருத்த வேண்டியது மக்களை. 

வீரப்பன் மகள் நடிப்பு

இயக்குநர் ராஜா, பாடலாசிரியர் ஆலயமணியின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். கேளிக்கை வரி, கேளிக்கூத்து வரி ஆகிவிடக்கூடாது.  பொறுப்புள்ள மனிதனாக இருந்தால் சமுதாயத்துக்கான படத்தை கொடுப்பார்கள். இந்தப் படம் சமுதாயத்துக்கான படம். இந்தப் படத்தின் பாடலை கேட்டதும் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். 

நாம்தான் இந்த மாதிரி படம் எடுக்கவில்லை. ஆனால் எடுப்பவர் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இவருடன் இருக்கிறேன்.  வீரப்பன் மரண செய்தி கேட்டு பல லட்சம் பேர் வருத்தப்பட்டார்கள். அந்த குடும்பம் பட்ட கஷ்டத்தைத்தாண்டி தற்போது அவரது மகள் நடித்திருக்கிறார். கண்டிப்பாக எனது ஆதரவு இருக்கும்.  இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்” எனப் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget