மேலும் அறிய

கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் சிங்கர் சீசன் 11 இல் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் நடுவராக பங்குபெற இருக்கிறார்

சூப்பர் சிங்கர் 11 இல் மிஷ்கின்

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த,  விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது.  இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். 

சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின்  ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.

நான்கு ஜட்ஜ்கள் ஒவ்வொரு மண்டலத்திற்குப் பொறுப்பேற்கின்றனர். டெல்டா தமிழ் சார்பாக மிஷ்கின் பங்கேற்கிறார். சென்னைத் தமிழ் சார்பாக இசையமைப்பாளர் தமன், கொங்கு தமிழ்  சார்பாக அனுராதா ஶ்ரீராம், எங்கும் தமிழ் சார்பாக பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்.

தமிழக மக்களின் மனங்களில் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம்,  பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வந்துள்ளது. 

சூப்பர் சிங்கர் சீசன் 11, புதுமையான களம், மண்டல வாரியான போட்டியாளர்கள், புதிய ஜட்ஜ்கள், என ஆரம்பமே களைகட்டுகிறது. சூப்பர் சிங்கர் 11 சீசன் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது.

தலைப்பு செய்திகள்

நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Embed widget