மேலும் அறிய

Draupathi 2: அவதார் போல திரௌபதி 2 படம் .. இயக்குநர் மோகன் ஜி போட்டுடைத்த உண்மை!

பொதுவாக தியேட்டர் ஸ்கிரீன்கள் ஹீரோக்கள் அடிப்படையில் பிரிக்கப்படும் என்பதால் நிச்சயம் திரௌபதி 2 படத்துக்கு ஸ்கிரீன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

திரௌபதி 2 படத்தில்  1300 சிஜி காட்சிகள் உள்ளது என்றும், இப்படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றும் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி 2 படமானது ஜனவரி 23ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, ரக்‌ஷனா இந்துசூடன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, திரௌபதி 2 படம் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றி பேசியுள்ளார். அதில், “நிஜமாகவே பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சங்கடமான விஷயமாகவே நான் பார்க்கிறேன். நாங்கள் முன்னதாக 2026 ஜனவரி 23ம் தேதி திரௌபதி 2 படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்திருந்தோம். திடீரென அஜித்தின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேரின் படங்கள் (அஜித் - ரிச்சர்ட் ரிஷி) ரிலீஸாகி பிரச்னை ஆக வேண்டும் என நினைத்து ஜனவரி 30ம் தேதிக்கு தள்ளி வைக்க நினைத்தோம். 

ஆனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஒருவேளை ஜனவரி 23, 30 தேதியில் திரௌபதி 2 படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. பிப்ரவரி எல்.ஐ.கே படம் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலும் வந்து விட்டால் சிக்கலாகி விடும் என்பதால் பொங்கல் ஸ்லாட் காலியாகவும் ஜனவரி 15ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கல் என ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டது. 

பொதுவாக தியேட்டர் ஸ்கிரீன்கள் ஹீரோக்கள் அடிப்படையில் பிரிக்கப்படும் என்பதால் நிச்சயம் திரௌபதி 2 படத்துக்கு ஸ்கிரீன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். காரணம் இப்படம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ரிஸ்கை சமாளிக்க, போட்ட முதலீட்டை மீட்டெடுக்க ஜனவரி 23ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து விட்டோம்.  திரௌபதி படத்தின் 2ம் பாகம் தான் இப்படம். அந்த படம் 17 நாட்களில் ரூ.18 கோடி வசூலை ஈட்டியது. ஆனால் 18வது கொரோனா ஊரடங்கு வந்து விட்டது. இல்லாவிட்டால் அப்படம் ரூ.25 கோடி வசூலை ஈட்டியிருக்கும். அந்த படம் வெறும் ரூ.45 லட்சத்தில் உருவானது. 

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழ் தவிர மற்ற 4 மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதால் தயாரிப்பாளர் இவ்வளவு கோடியை முதலீடு செய்துள்ளார். திரௌபதி 2 படம் 31 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் செய்யப்பட்டது. அவதார் 2 படமும் 31 நாட்கள் தான் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அப்படம் உலகம் முழுக்க ரூ.50 ஆயிரம் கோடி வசூலை பெற்றது. ஒரு வருடம் அந்த படத்துக்கு போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடந்தது. அந்த மாதிரி பிளான் பண்ணினால் ரூ.12 கோடி பட்ஜெட்டில் ஒரு வரலாற்று படம் பண்ணி விடலாம்.  இந்த படத்தில் 1300 சிஜி காட்சிகள் உள்ளது. ட்ரெய்லரில் 62 சிஜி காட்சிகள் உள்ளது. தியேட்டரில் திருப்திகரமாக காட்சிகள் கொண்ட படமாக திரௌபதி 2 இருக்கும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Embed widget