மேலும் அறிய

ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்?என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் ஜிகர்தண்டா, இறைவி, மகான், பேட்ட போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். 

ரெட்ரோ:

இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் தோல்வி குறித்து அவர் பிரபல இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக கூறியிருப்பார்.

தோல்வி ஏன்?

அதில், அவர் கூறியிருப்பதாவது, ரெட்ரோ படத்தின் உண்மையான பெயர் தம்மம். அதான் நான் வைத்திருந்தேன். தம்மம் என்பது ஒருவன் அவன் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிப்போகவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். நடக்கும் நிகழ்வுகள் வாழ்வின் அர்த்தத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதே படத்தின் கதை.

அதில் அவனுக்கும் நடக்கும் காதல், சிறையில் சந்தித்து அவன் செல்லும் இடமும் அந்த நோக்கத்திற்கான வழிகாட்டாகத்தான் இருந்தது. ஆனால், அதை மொத்தமாக வணிக ரீதியாக பெரிய ஹீரோவாக வைத்துப் பண்ணும்போது அதை வேறு மாதிரியாக பண்ணியிருந்தேன். ரெட்ரோ என்று தலைப்பு வைத்து காதல் கதை மாதிரி சென்றபோது எதிர்பார்ப்பு வேறு மாதிரி வந்துவிட்டது.

இந்த விஷயங்கள் பல விஷயங்களாக பலரும் உணருவது போல இருந்ததாக பலரும் கூறினார்கள். ஏராளமான நல்ல விஷயங்களும் கூறினார்கள். பலரும் இரண்டாம் பாதி எங்களுக்கு மனதுக்கு நெருக்கமாகவே இல்லை என்று கூறினர். கதை எங்கெங்கேயோ போகிறது என்றனர்.

கதை ஆசிரியராக எனக்கு புத்தரை பின்தொடரும் ஒரு பெண், கிருஷ்ணரை அந்த அவதாரத்தை அடைய வைத்ததற்கான இடம்தான் என்று இருக்கும். இவ்வாறு அவர் கூறியிருப்பார்.

ரசிகர்கள் ஏமாற்றம்:

நடிகர் சூர்யாவிற்கு அதற்கு முந்தைய படமான கங்குவா எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழலில், ரெட்ரோ படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், சுவாசிகா, சிங்கம்புலி, ப்ரேம்குமார் என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். ஸ்டோன்பெஞ்ச் ப்லிம்ஸ் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருப்பார்கள். 65 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் சுமார் 100 கோடி முதல் 200 கோடி வரை வசூலித்ததாக படக்குழு  தெரிவித்தது. ஆனால், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.

பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?

Advertisement

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget