மேலும் அறிய

Leo Watch Video: 'டெளவ் டொ டொ டெளவ்' லியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன்

லியோ திரைப்படத்தில் நான் ரெடி பாடலுக்கு இயக்குநர் கெளதம் மேனன் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், உள்ளிட்டவர்கள்  நடித்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

நான் ரெடி பாடல்

லியோ திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் முதல் பாடலான நான் ரெடி பாடல் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி  நடிகர் விஜய் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. இணையதளத்தில் இந்தப் பாடல் பல்வேறு சாதனைகளை செய்தது. அனிருத் இசையில் விஷ்னு எடவன் இந்தப் பாடலில் வரிகளை எழுதினார். நடிகர் விஜய் மற்றும் அசல் கோலார் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். தினேஷ் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் கோரியோகிராப் செய்துள்ளார். 

சர்ச்சையை கிளப்பிய பாடல் வரிகள்

 நான் ரெடிதான் பாடல் வெளியாகிய சமயம் முதல் பலவிதமான சர்ச்சைகளில் சிக்க வருகிறது. இந்தப் பாடலில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் இந்த காட்சிகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பாடலில் உள்ள வரிகள் சிலவற்றையும் சென்சார் வாரியம் நீக்கக் கோரியது. 

ஆனால் மறுபக்கம் இந்த பாடல் ரசிகர்கள் கொண்டாடும்   பாடலாக மாறியுள்ளது. மொத்தம் 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்று மொத்தம் 7 நாட்கள் இந்த ஒரு பாடலுக்கான படபிடிப்பு நடைபெற்றதாக படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தார்.  இணையதளத்தில் இந்தப் பாடலை வைத்து ரீல்ஸ் வைரலாகி வருகின்றன. ஆப்பிரிக்கா வரை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

பிரபலங்கள் நடனம்

சமீபத்தில்  தான்சானிய உடன்பிறப்புகளான கிளி பால் மற்றும் நீமா பால் இருவரும் விஜயின் 'நான் ரெடி' பாடலுக்கு ஆச்சு அசலாக நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நான் ரெடி பாடலுக்கு நடன்மாடி வீடியோ பதிவிட்டிருந்தார். இதுவரை யூடியூபில் மட்டுமே இந்தப் பாடல் 154 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமீபத்தில் நான் ரெடி பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டது படக்குழு. இதனால் பிற மாநிலங்களில் இருக்கும் விஜய் ரசிகர்களும் இந்த பாடலுக்கு வைப் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

குத்தாட்டம் போட்ட கெளதம் மேனன்

தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் மேனன் நான் ரெடி பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget