மேலும் அறிய

BharathiRaja Health: உடல் நலம் தேறி வருகிறேன்.. இதை மட்டும் செய்யாதீர்கள்.. இயக்குநர் பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விரைவில் உடல் நலம் பெற்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே அவருக்கு மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதாகவும், அப்பாவின் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் அவரது மகனும், நடிகருமான மனோஜ் தெரிவித்திருந்தார். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்ததோடு, தங்கள் வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் கூறினர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

அந்த வகையில் பாரதிராஜா விரைவில் குணமடைய பிரான்சில் இருக்கும் தேவாலயத்தில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். இதேபோல் மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து, அவரின் நெஞ்சில் கொஞ்சம் சளி இருக்கிறது. அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினார். மேலும் பாரதிராஜா மீண்டும் வருவார். கலை உலகை ஆளுவார் எனவும் வைரமுத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பாரதிராஜா தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்  பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். 

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget