மேலும் அறிய

விஜய் சேதுபதி - வடிவேலு கூட்டணி கிட்டத்தட்ட உறுதி... யார் இயக்குனர் தெரியுமா?

நீண்ட இடைவெளிக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள வைகை புயல் வடிவேலு அடுத்ததாக "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணி, ஸ்டைல், உடல் அசைவுகள் என ஒட்டுமொத்த  ரசிகர்களையும் தன்னுடைய காமெடி வலையில் சிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. சில காரணங்களால் நீண்ட நாட்களாக சினிமா பக்கம் வராமல் ஒதுங்கி இருந்த நடிகர் வடிவேலு சமீபகாலமாக சில படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

விஜய் சேதுபதி - வடிவேலு கூட்டணி கிட்டத்தட்ட உறுதி... யார் இயக்குனர் தெரியுமா?

மீம்ஸ்களின் ராஜா :

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரங்களின் பெயர்கள், காமெடிகள், வசனங்கள், முக பாவனை என அனைத்தும் இன்றும் மீம்ஸ் செய்யப்பட்டு வருகிறது. சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இன்றும் மீம்ஸ்களின் ராஜா வடிவேலு தான்.  லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கிய 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில்  உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் நடிக்கும் "மாமன்னன்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சூப்பர் ஹிட் திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "சந்திரமுகி" படத்தின் இரண்டாம் பாகம் "சந்திரமுகி 2" படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இனைந்து நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

விஜய் சேதுபதி - வடிவேலு கூட்டணியின் இயக்குனர் யார் ?

அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளார் வடிவேலு என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது படத்தின் இயக்குனர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" படத்தை இயக்கியவர் ஆறுமுக குமார். அவரின் இயக்கத்தில் தான் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget