மேலும் அறிய

Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் விஜய். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “தலைவா” என்ற படத்தில் நடித்தார்.

தனக்காக கூடிய கூட்டத்தைப் பார்த்து நடிகர் விஜய் ஆச்சரியப்பட்டு போனதாக இயக்குநர் ஏ.எல்.விஜய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் விஜய். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் “தலைவா” என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் அமலா பால், நாசர், சந்தானம், பொன்வண்ணன், சுரேஷ், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் டைட்டிலுக்கு கீழே “Time to Lead" என்ற வாக்கியம் இடம் பெற்றது. இது அன்றைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை கோபமடைய செய்தது. படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதலில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் 21 ஆம் தேதி தான் ரிலீஸானது. ஆனால் அதற்குள் மற்ற மாநிலங்களில் படம் ரிலீசாக, பல்வேறு விமர்சனங்கள் காரணமாக படம் சரியாக செல்லவில்லை. ஆனால் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்ட படங்களில் தலைவா மிக முக்கியமான ஒன்று. அதன்பிறகு விஜய் படம் ரிலீசாகும் போதெல்லாம் ஆளும் கட்சியினருடன் பிரச்சினை மேல் பிரச்சினை தான் ஏற்பட்டு வருகிறது. 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.எல்.விஜய் தலைவா ஷூட்டிங் சமயத்தில் நடந்த முக்கியமான சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில், “ஒவ்வொரு இயக்குநருக்கு தனது கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்று இருக்கும். அந்த வகையில் எனக்கு முக்கியமான படம் “தலைவா”. இன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை அடையாளப்படுத்திய படம். கதைக்கான தலைப்பாக தான் “தலைவா” என பெயர் வைத்தோம். 

தளபதி கூட டைட்டில் யோசிச்சோம். விஜய்க்கும் அது ரொம்ப பிடிச்சி இருந்தது. அந்த டைட்டிலை ஜிவி பிலிம்ஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்றோம். தளபதி பட இயக்குநர் என்ற முறையில் மணிரத்னத்திடம் போய் கேட்பது  மரியாதையானது என அவரை சந்தித்தோம். ஆனால்  மணிரத்னம் எங்களிடம், “உன்னோட படத்துக்கும் ஒரு அடையாளம் இருக்குது. தளபதி படத்துக்கும் அடையாளம் இருக்குது. இரண்டையும் இழக்க வேண்டாம்” என தெரிவித்தார். எங்களுக்கு அதுதான் சரி என பட்டது. அதன்பின்னர் தலைவா என முடிவு செய்யப்பட்டது. 

விஜய் ரொம்ப பணியில் அக்கறையுடன் இருப்பார். தமிழா தமிழா பாடலுக்காக 15 நாட்கள் பயிற்சி எடுத்தார். அவர் இரவு ஷூட்டிங்கை பெரும்பாலும் விரும்ப மாட்டார். படம் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன் என சொன்னார். அவர் ரொம்ப சாதாரணமானவராக இருப்பார். அதில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே விஜய் வருவார். 

அதெல்லாம் ஷூட்டிங்கை ஸ்பாட்டில் விஜய்யை காண வந்த கூட்டம். போலீசார் எப்படியாவது அவரை வந்து கை காட்ட சொல்லுங்கள் என தெரிவித்தார். அங்குள்ள பழைய பாலம் ஒன்றின் மீது கூட்டம் கூடுகிறது. அந்த பாலம் உடைந்து விடும் நிலையில் இருந்தது. கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் இருந்தார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்து விஜய் ஆச்சரியப்பட்டு போனார்.இத்தனைக்கும் ஷூட்டிங் மும்பையில் நடந்தது” என ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
பாதியில் நின்ற அருண் விஜய் படப்பிடிப்பு...திரெளபதி தயாரிப்பாளருடன் முத்தையா வாக்குவாதம்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்
நீங்க நடிச்சா துணிச்சல் நாங்க நடிச்சா ஆபாசமா..தீபிகா படூகோனை வெளுத்து வாங்கிய கங்கனா ரனாவத்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget