மேலும் அறிய

ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?

D56 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.126 கோடியா? தனுஷ், வடிவேலுவுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D56 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில் தனுஷுடன் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது D56 படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷின் 56-வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

பட்ஜெட் , நடிகர்களின் சம்பளம்

அந்த வகையில் D56 படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.126 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனுஷுக்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலுவுக்கு ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

D56 படத்தின் தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. படத்திற்காக பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் ரூ.30 கோடி முதலீடு செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை அந்த நிறுவனம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வரூப் ரெட்டியும் படத்தின் நிதியளிப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா ஆகியோருடன் விஜயகுமார் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மாஸ் கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகும் D56 திரைப்படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் - வடிவேலு கூட்டணி, தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget