மேலும் அறிய

Dhanush: விஜய்யும் இல்ல; அஜித்தும் இல்ல; எனக்கு எப்போதும் இவர்தான்! - தனுஷ் அதிரடி பதில்

தெலுங்கு நடிகர் முதல் அஜித் - விஜய் வரை வைரலாகும் தனுஷ் பதில்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் பல எதிர்ப்புகளை மீறி இன்று ஒரு சாதனை நாயகனாக தேசிய விருது பெற்ற ஒரு நடிகராக தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். நடிகர் தனுஷின் மிகவும் சாதாரணமான தோற்றம் எளிதில் அனைவரையும் கவர்ந்து விடுவதால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முக கலைஞராக விளங்குகிறார். 

நடிகர் தனுஷ் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த கலந்துரையாடலின் போது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதும் உண்டு. அந்த வகையில் நேற்று இரவு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். ஷூட்டிங் செல்ல அரை மணி நேரம் உள்ளது. அது வரையில் உங்களுடன் அரட்டையடிக்க விரும்புகிறேன். உங்களுடைய கேள்விகளை கேளுங்கள் என உரையாடலை தொடங்கினார் தனுஷ். மிகவும் ஸ்வாரஸ்யமான அரட்டையாக அமைந்த இந்த உரையாடல் சமயத்தில் தனுஷ் அளித்த சில பதில்கள் மிகவும் வைரலாக இணையத்தில் பரவி வருகின்றன. தனக்கு பிடித்த தெலுங்கு ஹீரோ முதல் அஜித், விஜய் வரை பல கேள்விகளுக்கு பதிலளித்து இருந்தார் நடிகர் தனுஷ். 

Dhanush: விஜய்யும் இல்ல; அஜித்தும் இல்ல; எனக்கு எப்போதும் இவர்தான்! - தனுஷ் அதிரடி பதில்

உங்களுக்கு பிடித்த தெலுங்கு நடிகர் யார் என கேட்ட அடுத்த நொடியே சற்றும் யோசிக்காமல் 'பவன் கல்யாண்' என பதிலளித்தார். மேலும் இதற்காக மற்ற நடிகர்கள் என்னை வெறுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொண்டார். இந்த உரையாடல் சமயத்தில் தல மற்றும் தளபதி குறித்து பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினர். பொதுவாக நீங்கள் அஜித் ரசிகரா அல்லது விஜய் ரசிகரா என கேட்கப்பட்டது. மிகவும் சிம்பிளாக தனுஷ் 'நான் ரஜினி ரசிகன்' என பதிலளித்தார். இருப்பினும் நான் இருவரின் நடிப்பிலும் இருந்தும் நான் கற்றுக் கொண்டுள்ளேன். அவர்களை கண்டு வியந்து உள்ளேன் என பதிலளித்து இருந்தார் தனுஷ். 

வில்லன் ரோல்களில் நடிக்கும் விருப்பமும் உண்டு என தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, விஜய் சேதுபதி திறமையானவர், நயன்தாராவை அனைவரும் விரும்புகிறார்கள், சமந்தா ஒரு திறமையான நடிகை என பதிலளித்தார். இது தவிர மேலும் பல கேள்விகளுக்கு தனுஷ் பதிலளித்து இருந்தார். 

தற்போது தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்களான சிவ ராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். 

மேலும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சமூக அக்கறை, சாதி உணர்வு சார்ந்த திரைக்கதை கொண்ட இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரம் தனித்துவம் மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget