மேலும் அறிய

dhanush with sundar.c | சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ் ? - விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்!

அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில், சுந்தர்.சி தலைநகரம் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம்.

அரண்மனை படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாகங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து சுந்தர்.சி , தற்போது அதன் மூன்றாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அரண்மனை 3 என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில்  ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மறைந்த நடிகர் விவேக் , யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துத்துள்ளனர். நடிகர் விவேக் அவர்கள் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் அரண்மனை 3 என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரண்மை 3 படத்தின் டிரைலர் வெளியானது. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது , முந்தைய பாகங்களை காட்டிலும் அரண்மனை 3 படத்தில் கூடுதல் த்ரிலிங் காட்சிகளை இணைத்துள்ளார் இயக்குனர். டிரையிலரின் ஒரு காட்சியில் ஆண்ட்ரியா கர்பிணியாக இருப்பது போல காட்டியுள்ளனர். வழக்கமாக பெண்கள் உடம்பில் பேய் புகுந்திருப்பதை போல காட்டும் சுந்தர் சி. அரண்மனை 3 படத்தில் ஆர்யா உடம்பில் பேய் இருப்பது போல காட்டியிருப்பதால் , கூடுதல் சுவாரஸ்யமாகவுள்ளது. 


dhanush with sundar.c | சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ் ? - விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்!

படம் வருகிற  அக்டோபர் 14 அன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் சுந்தர்.C . குஷ்பு படத்தை தயாரித்துள்ளார். அரண்மனை 3 படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார்  இந்த படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் உதயநிதி பெற்றுள்ளார். அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில் சுந்தர்.சி, தலைநகரம் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாக உள்ள அந்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைப்பெற்று வருகிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


dhanush with sundar.c | சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ் ? - விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்!
தனுஷ் தற்போது ஏராளமான  படங்களை  கைவசம் வைத்துள்ளார். பாலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த தனுஷ், அங்கும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவ்வபோது ஹாலிவுட் சினிமாக்களிலும் தலைக்காட்டி வருகிறார். சமீபத்தில் கூட ஹாலிவுட் படம் ஒன்றை நடித்து கொடுத்துள்ளார். தமிழில் மாறன் , நானே வருவேன் , திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில் சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஒப்பந்தமானால் அது ரசிகர்களுக்கு நிச்சயமாக ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget