மேலும் அறிய

பியானோ வாசித்ததால் 15 நாள் சஸ்பெண்ட்...தேவாவின் ஆரம்பாகால இசை வாழ்க்கை எப்படி இருந்தது

தூர்தர்ஷனில் பியானோ வாசித்ததால் 15 நாள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தேவா, இசையமைப்பாளராக உருவான ஆரம்பகாலப் பயணம்.

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த வித இசைப் பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் சாதித்த தேவாவின் ஆரம்ப கால வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள், மெலடிகள் எனத் தனித்துவமான இசையை வழங்கிய இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, திரையிசையில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு முன்பு தூர்தர்ஷனில் பணியாற்றி வந்தார். அங்கு படப்பிடிப்புத் தளங்களை அமைக்கும் பணியில் இருந்தபோது, பியானோ வாசித்ததற்காக 15 நாட்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக அவர் பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரகசியமாக ஹார்மோனியம் கற்ற தேவா

தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சோக்கலிங்கம். மயிலாப்பூரில் வளர்ந்த அவர், சிறுவயதிலேயே இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். குடும்பச் சூழல் காரணமாக இசையைக் கற்கவும், அதனைத் தொழிலாகத் தொடரவும் தொடக்கத்தில் வாய்ப்புகள் குறைவாக இருந்தன.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால், நாடக இசைக்கலைஞர்களான காமேஷ், ராஜாமணி ஆகியோரின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அவர்களுக்கு டாக்ஸி ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை தேவா மேற்கொண்டார்.

அப்போது இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியாத தேவா, அவர்கள் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் ஹார்மோனியத்தை வாசித்துப் பழகினார். தொடர்ந்து பயிற்சி செய்ததன் மூலம் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் நாடகங்களில் இடைவேளைக் காட்சிகளின்போது ஹார்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். சந்திரமௌலி, எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரா உள்ளிட்ட நாடகக் கலைஞர்களும் அவரை இசைக்கருவி வாசிக்க அழைத்ததாக தேவா அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

சொந்தமாக இசைக்குழு

1973-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து ‘போஸ் – தேவா’ என்ற இசைக்குழுவைத் தொடங்கினார். இந்தக் குழுவின் மூலம் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சினிமாவிலும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்.

சுமார் 1977-ம் ஆண்டு ‘மதுரை கீதம்’ என்ற திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தேவா நினைவுகூர்ந்துள்ளார். ஆனால் சில சூழ்நிலைகளால் அந்தப் படத்துக்கு சந்திரபோஸ் தனியாக இசையமைத்தார். இதனால் இசைக்குழுவும் பிரிந்தது. அதன்பிறகு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், குடும்பத்தின் வற்புறுத்தலால் தூர்தர்ஷனில் பணியில் சேர்ந்தார்

பியானோ வாசித்ததால் பணியிடைநீக்கம்

தூர்தர்ஷனில் தேவா படப்பிடிப்புத் தளங்களை அமைக்கும் பணியில் இருந்தார். அப்போது ஒரு படப்பிடிப்புக்காகப் பியானோ கொண்டுவரப்பட்டது. இசைக்கருவிகளின் மீது ஆர்வம் கொண்டிருந்த தேவா, அங்கிருந்த பியானோவை வாசித்துள்ளார்.

அந்தப் பணியின்போது, களைப்பாக இருந்த ஊழியர்களின் பொழுதுபோக்குக்காக இரவு நேரங்களில் பியானோ வாசித்ததாகவும், அதற்காக 15 நாட்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இசையைக் கற்றுக்கொள்வதில் மேலும் கவனம் செலுத்தினார். இசையமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரிடம் பியானோவும், ஜே.பி. கிருஷ்ணா மாஸ்டரிடம் ஹார்மோனியத்தின் மூலம் கர்நாடக இசையும் கற்றுக்கொண்டார். தன்ராஜ் மாஸ்டர் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்திப் பாடல்கள் மூலம் கிடைத்த அங்கீகாரம்

1980-களில் தேவா பக்திப் பாடல் ஆல்பங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். அந்தப் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. ஏறத்தாழ 450 பக்திப் பாடல் ஆல்பங்களுக்கு இசையமைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், தேவாவுக்கு திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் திரையிசையில் வாய்ப்பைப் பெறுவதற்கான அவரது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது.

தேவாவின் முதல் திரைப்படம் 1989-ல் வெளியான மனசுக்கேத்த மகராசா. தொடர்ந்து வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அவரது இசை பரவலான கவனத்தைப் பெற்றது. பின்னர் அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக நிலைநிறுத்தின.

தூர்தர்ஷனில் பணியாற்றிய காலத்தில் பியானோ வாசித்ததற்காகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தேவா, பின்னர் அதே இசைக்கருவியை முறையாகக் கற்றுக்கொண்டு திரையிசையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கினார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
Embed widget