மேலும் அறிய

DanceVSDance 2: பிருந்தா மாஸ்டருடன் குஷ்பு போட்ட ஆட்டம்… மீண்டும் மானாட மயிலாட பார்த்த திருப்தி!

நடுவர்களான குஷ்புவும் பிருந்தா மாஸ்டரும் ஒன்றாக மேடையில் நடனம் ஆடும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழ் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விக்க பிரபல முன்னணி தமிழ் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு பல கண்கவர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல்களுக்கு அடுத்து மிகவும் பிடித்திருப்பது ரியாலிட்டி ஷோக்கள் தான். எனவே ரியாலிட்டி டான்ஸ் ஷோ, ரியாலிட்டி சாங் ஷோ என்று வரிசைகட்டி முன்னணி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் டான்ஸ் ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடனத்தின் மீது ஆர்வம் இருக்கும் பெரியவர்களை தவிர குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் டான்ஸ் ஷோக்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். பிரபல முன்னணி தமிழ் சேனலாக இருந்து வரும் கலர்ஸ் தமிழிலும் மக்களை கவரும் வகையில் டான்ஸ் ரியாலிட்டி ஷோ இடம் பெற்றுள்ளது. 

டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ்களாக பிரபல நடிகை குஷ்பு சுந்தர், நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிகழ்ச்சி குறித்து குஷ்பு ஒரு புதிய ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில் நடுவர்களான குஷ்புவும் பிருந்தா மாஸ்டரும் நடனம் ஆடும் புகைப்படங்கள் இணைக்க பட்டுள்ளது. அதற்கு கேப்ஷனாக "நடுவர்கள் நடன மேடையை பொறி பறக்கச்செய்ய முடிவு செய்தபோது" என்று ஆங்கிலத்தில் எழுதி, இன்று மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்க்க சொல்லி இருக்கிறார். நடுவர்களான குஷ்புவும் பிருந்தா மாஸ்டரும் ஒன்றாக மேடையில் நடனம் ஆடும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 

இன்று மாலை அந்த எபிசோடை காண ரசிகர்கள் இப்போதே காத்திருக்க தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி நாளை சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் என்பதால் அதற்கான ஸ்பெஷல் எபிசோடும் காத்திருக்கிறது. அந்த எப்டிசோடிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா கலந்துகொண்டுள்ளார். நடிகை குஷ்புவும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எபிசோடில் இயக்குனர் சிவா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் படப்பிடிப்பு செய்த அனுபவங்களை பகிறந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனுடைய ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை சேகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget