மேலும் அறிய

HBD Prabudeva : “டான்ஸின் ட்ரெண்ட் செட்டர் .. இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” - நடிகர் பிரபுதேவா பிறந்தநாள் இன்று..!

'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என கொண்டாடப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவின் 50வது பிறந்தநாள் இன்று

டான்ஸ் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான் என உலகமே கொண்டாடும் போது நமது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பொக்கிஷம் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா. உடலை ரப்பர் போல வளைத்து வளைத்து ஆடி தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்ட் செட் செய்தவர் நமது 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபு தேவா என்றால் அது மிகையல்ல. இந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று 50வது பிறந்தநாள்.

 

HBD Prabudeva : “டான்ஸின் ட்ரெண்ட் செட்டர் .. இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” - நடிகர் பிரபுதேவா பிறந்தநாள் இன்று..!
நடன இயக்குனர் சுந்தரத்தின் வாரிசுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து தான் வர வேண்டுமா என்ன? ரத்தத்தில் ஊறிய நடனத்தை முறைப்படி சிறிய வயது முதல் கற்றவர். வெஸ்டர்ன், பரதம் என அனைத்து நடன கலைகளை கற்று தேர்ந்தவர். ஒரு நடன இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய பிரபு தேவா தொடக்கத்தில் ஒரு சில பாடல்களில் நடனமும் ஆடியிருப்பார். அவரின் இந்த அசுர வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாய் இருந்தது அவரின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். சிறிய வயது முதல் அவரை சரியான முறையில்  ட்ரெயினிங் கொடுத்து இன்று உலகம் போற்றும் வெற்றியாளராக ஜொலிக்க வைத்துள்ளார். 

 

HBD Prabudeva : “டான்ஸின் ட்ரெண்ட் செட்டர் .. இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” - நடிகர் பிரபுதேவா பிறந்தநாள் இன்று..!

நடிகையாக பிரபுதேவா :

டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் நடிகராகவும் களமிறங்கி ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். நடனத்தை கடந்தும் அவரின் அப்பாவித்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்து திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். காதலன், லவ் போர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, வி.ஐ.பி, வானத்தைப் போல, பெண்ணின் மனதை தொட்டு, தேவி, குலேபகாவலி போன்ற படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. சூப்பர் பாஸ்ட் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் போடுவதில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை. இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். 

பலரின் இன்ஸ்பிரேஷன் :

இன்று சிறு குழந்தைகள் கூட அட்டகாசமாக டான்ஸ் ஆடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. டான்ஸ் கிளாஸ் போவது என்பது இன்றியமையாத ஒரு திறமைகளை வளர்க்கும் காரணியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு நடனத்துக்கு முக்கியத்துவம் அதிகரித்துவிட்டது. ஏராளமான டான்ஸ் போட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இன்றைய டான்ஸ் ஸ்டைல் என்பது பல பரிமாணங்களை கடந்துள்ளது. ஏராளமான கலைஞர்களுக்கும் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது டான்ஸ். இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி' தான்.

இன்று தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல நடன இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நிகழ்ச்சி என்றும் சொல்லலாம். இப்படி பலரின் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒருவர் பிரபு தேவா. யாருக்கெல்லாம் டான்ஸ் பிடிக்குமோ அவர்களுக்கெல்லாம் நிச்சயம் பிரபு தேவாவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட வைத்த, வைக்கும் கலைஞனே உனக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.   

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget