மேலும் அறிய

கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் டாடா பட இயக்குநர்

கவின் நடித்த டாடா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கணேஷ் கே பாபு தற்போது தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்க இருக்கிறார்

 

Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில்  ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும். ‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான **‘கராத்தே பாபு’**வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி பணிகள் வரை வேகமாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து  தயாரிப்பாளர் எனும் இந்த முயற்சியின் மூலம், அவர் தனது படைப்புத் துறையை விரிவாக்கி, வலுவான கதைகள் மற்றும் புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே பாபு கூறியதாவது

படத்தின் நாயகன் கௌதம் ராம் கார்த்திக் குறித்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தார். கௌதம் ராம் கார்த்திக் தனது கரியரில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளார். சாமானியனின் அரசியல் வாழ்வை  காமெடி கலந்து எடுத்துரைக்கும் இந்த படத்துக்குத் தேவையான ஆழமும் திறனும் அவரிடம் உள்ளது. சுவாரஸ்யத்தையும் எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் சமநிலைப்படுத்தும் அவரின் திறமை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றார்.

மேலும், கௌதம் ராம் கார்த்திக்கை பார்வையாளர்கள் நீண்டநாள் நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.இந்தப் படத்தில் செல்வராகவன் சார் இதுவரை காணப்படாத, புதிய பரிமாணம் கொண்ட கதாபாத்திரத்தில் தோன்றி, பார்வையாளர் அனைவரின் கவனத்தையும் நிச்சயம் இருப்பார். இப்படத்தின் மூலம் இயக்குனராக தினா ராகவன் அறிமுகமாகிறார்.
இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளராக பணியாற்றிய தினா ராகவன், தெளிவான பார்வை, மற்றும் புத்துணர்ச்சி மிக்க படைப்பாற்றலை கொண்டவர். இந்த வகை படத்தை உருவாக்குவதற்கு சரியான தேர்வாக அவர் திகழ்கிறார் என்றார்.

நடிகர்கள்

கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு :

இசை – சாம் சிஎஸ்
வசனம் – ராஜு முருகன்
ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா
கலை இயக்கம் – தா. ராமலிங்கம்
படத்தொகுப்பு  – தீபக் எஸ் 
பாடல்கள் – யுகபாரதி, கணேஷ் கே பாபு, சௌமியா பாரதி D
சண்டை  – அபிஷேக் ஸ்ரீநிவாஸ்
ஆடை வடிவமைப்பு – காயத்ரி பாலசுப்ரமணியன்
எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – கார்த்திக் துரை
ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – அமிர்தராஜ்
லைன் புரொடியூசர்  – பாலாஜி பாபு S
டிசைன்ஸ் – சாயப்பட்டரை
மக்கள் தொடர்பு – ரேகா

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget