மேலும் அறிய

க்ளைமேக்ஸுக்கு வந்த குக் வித் கோமாளி சீசன் 3! வெளியானது பிரம்மாண்ட, கலகலப்பு ப்ரோமோ

குக் வித் கோமாளி சீசன் 3 ஷோ இறுதிப்போட்டியின் பிரம்மாண்டமாக, கலகலப்பாக வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 ஷோ இறுதிப்போட்டியின் பிரம்மாண்டமாக, கலகலப்பாக வெளியாகியுள்ளது. அது வெளியானதில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் அதனைப் பார்த்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தர்ஷனுக்கு தான் ஆல் தி பெஸ்ட் வோட் அதிகமாக இருக்கிறது.

இறுதிப் போட்டியில் அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். கிரேஸ் கருணாஸ் வைல்ட் கார்டு மூலம் வந்துள்ளார். 

அடுத்த வாரம் இந்தப் போட்டியின் ஃபைனல்ஸ் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.  வழக்கமாக 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஷோ அன்றைய தினம் மதியம் 3 மணி முதலே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோ வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி இறுதிப் போட்டி லைவாக வரப்போவதில்லை. இதற்கான சூட்டிங் கடந்த வெள்ளிக்கிழமை 2 மணியுடன் முடிவு பெற்றுவிட்டது. 

டைட்டில் வின்னர் உஷ்:

இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் ஃபைனலிஸ்ட் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் கசிந்துவிட்டது. கனி, வனிதா விஜய்குமார் என மக்களும் ஊகித்தனர். அதேபோல் ஆங்காங்கே தகவல்களும் கசிந்தன. ஆனால் இந்த முறை அப்படியல்ல, சீசன் வின்னர் யார் என்று சொல்லாமல் செம்ம ரகசியம் காக்கிறது மொத்த யூனிட்டும். அதேபோல், கடந்த 2 சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் ஃபைனலிஸ்ட்களான அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா அப்புறம் வைல்டு கார்டு என்ட்ரன்ட்ஸ் கிரேஸ் கருணாஸ், சந்தோஷ் பிரதாப் ஆகிய அனைவருமே கிச்சன் கில்லாடிகள். ஆகையால் மக்களால் அவ்வளவு எளிதாக யூகிக்க முடியவில்லை. ஆனாலும், சூப்பர் சிங்கர் மாதிரி ஓட்டுப் போடச் சொன்னால் தர்ஷனுக்கே அதிக வாக்கு விழும் என்று நெட்டிசன்களே கூறுகின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ:

சர்ச்சையில் சிக்கிய ஷோ:

பிரபலம் என்றால் சர்ச்சையும் இருக்கத்தானே வேண்டும். அப்படித்தான் குகு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் வடிவில் ஒரு சர்ச்சை வந்தது.

குக் வித் கோமாளி சீசன் 3  வீடியோ ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசிய சில காட்சிகள் இணையத்தில் வைரலானது. காரணம் அதில், செப் வெங்கடேஷ் பட் ' சொன்னா நம்ப மாட்டீர்கள். குக் வித் கோமாளி பார்த்துதான் நான் கர்ப்பமாகி இருக்கேன் என்று எனக்கு சிலர் மெசேஜ் அனுப்பியிருக்காங்க". அதற்கு ரோஷினி வாவ் என்று சொல்ல, தொடர்ந்து வெங்கடேஷ் பட் பேசினார். "எட்டு வருசமா எனக்கு குழந்தை இல்லை. அப்ப செக் அப்காக போயிருந்தேன். ஒரு லேடி குழந்தையோட வந்து என்கிட்ட  சொன்னாங்க. நான் கடைசி வருஷம் இதே ட்ரீட்மெண்ட்க்காக வந்து இருந்தேன். எங்களுக்கு அப்ப குழந்தை இல்ல. குக் வித் கோமாளி பார்த்தேன். என்னுடைய கவலை எல்லாம் மறந்து எனக்கு குழந்தை பிறந்துச்சு. நீ கண்டிப்பா அத பாரு உனக்கு குழந்தை பிறக்கும். நீங்க சொன்னா நம்ப மாடீங்க அந்த பொண்ணுக்கு இப்ப குழந்தை இருக்கு" என்று தெரிவித்தார். 

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களின் வெங்கடேஷ் பட் பேசிய காட்சியை பங்கமாக கலாய்த்தனர். அதற்கு செஃப் வெங்கடேஷும் பதிலடி கொடுத்தார்.

தலைப்பு செய்திகள்

Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League
பில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்த Premier League

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget