மேலும் அறிய

போலீசில் புகார்.. மீரா மிதுனை தொடர்ந்து கைதாவாரா பயில்வான் ரங்கநாதன்?

சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகராக இருந்து தற்போது பத்திரிகையாளர் என்னும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒரு வழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80-களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். மேலும், பெண் குறித்து தகாத வார்த்தைகளில் பேசுவார் என அறியப்படுபவர்.

இப்போது, சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து தரக்குறைவாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வன்னியரசு போட்ட ட்வீட்டால் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கைது ஆகுவரா? என்று சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார்கள். இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சினிமா பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறித்தும், நடிகைகளுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை பேசி வருகிறார்.

இந்நிலையில், இவர் மீது  ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த அ.சோனியா, சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நடிகா் பயில்வான் ரங்கநாதன் யூ-டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெண்களை ஆபாசமாகவும், இழிவுப்படுத்தியும்
பேசி வருகிறார். அவருடைய பேச்சு ஒட்டுமொத்த பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் சிதைக்கிறது. பொது வெளியில் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது குற்றமாகும் என்று புகார் அளித்துள்ளார்.

மேலும், இப்படி,கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாக பேசும் ரங்கநாதன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாா் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Minster Keerthana: ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
ரூ.3 கோடி கமிஷன் வாங்கினேனா? அமைச்சர் கீர்த்தனா 4 பக்க விளக்கம் - நெட்டிசன்கள் நச் கேள்வி
TN Govt: 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்..! CMDA-க்கு புது CEO, 13 IAS அதிகாரிகள் பணியிடமாற்றம் - அரசு அதிரடி
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
Anbil Mahesh: மெத்தை, கோழி குழம்பு, கொசு விரட்டி.. அன்பில் மகேஷிற்கு சிறையில் என்னென்ன வசதிகள்?
TN Govt: மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..! UDID அட்டை இருந்தா போதும் - முழு விவரம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Embed widget