மேலும் அறிய

Rajinikanth: ’மாப்ள இவருதான்’ காமெடியை டெவலப் செய்தது ரஜினி.. நடிகர் செந்தில் பகிர்ந்த சுவாரஸ்யம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற டிச.12ஆம் தேதி தன்னுடைய 73ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு சினிமா தவிர்த்து அனைத்து துறைகளையும் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்தனர். 

ரஜினி பற்றி செந்தில்

இந்நிலையில் கடந்த சில நாள்களாக இணையம் முழுவதும்  நடிகர் ரஜினிகாந்த் பற்றிய பல்வெறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒவ்விருவரும் தங்களது பார்வையில் ரஜினியின் கதாபாத்திரத்தைப் பற்றி விவரித்திருந்தார்கள் .அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்தில் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

ரஜினிகாந்த் குறித்து நடிகர் செந்தில் இப்படி கூறியுள்ளார் “நான் ரஜினிகாந்துடன் நிறையப் படங்கள் இணைந்து நடித்திருக்கிறேன். ரஜினி ஒரு நல்ல டைமிங் ஆர்டிஸ்ட். அந்தக் காலத்தில் நவரச நாயகன் என்றால் நடிகர் முத்துராமனை சொல்வார்கள். அது ரஜினிகாந்துக்கும் அப்படியே பொருந்தும். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். ஹீரோ , வில்லன், அப்பா, காமெடியன், தாத்தா என எந்த கதாபாத்திரம் என்றாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியும்.

காமெடி காட்சிகளை ரஜினிகாந்த் சிறப்பாக மேம்படுத்துவார். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார். இரவு முழுவதும் அவர் தூங்கவே மாட்டார். படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் இயக்குநருடன் கலந்து பேசிவிட்டு வருவார். ஆனால் பகலில் அதை எதுவும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். படையப்பா படத்தில் மாப்ள இவருதான் காமெடியில் முதல் ஒரு சில வரிகள் மட்டுமே இருந்தன. அந்தக் காட்சியை பேசி பேசி அவர்தான் டெவலப் செய்தார். ரஜினியின் டைமிங் காமெடி மேல்தட்டு கீழதட்டு என அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும். 

 வீரா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு மாலை போட்டு பொன்னாடை போர்த்திவிட்டார். ரஜினி ஒரு நல்ல மனிதர் , நாம் செய்யும் விஷயம் நன்றாக இருந்தது என்றால் அதை மனதாரப் பாராட்டுவார். அதுவே நன்றாக இல்லையென்றால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வேட்டையன்

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டு அதிகராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த் இந்தப் படத்தில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தலைப்பு செய்திகள்

அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
விளம்பரங்களால் படம் தாமதம்.. PVR-க்கு ₹75,000 அபராதம்!
விளம்பரங்களால் படம் தாமதம்.. PVR-க்கு ₹75,000 அபராதம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Renault Rafale Hypnotic: 300hp பவர்.! ரெனால்ட்டின் ஹைப்பர் ஹைப்ரிட் SUV; 1,500 பேர் மட்டுமே வாங்க முடியும்.! அப்படி என்ன இருக்கு.?
300hp பவர்.! ரெனால்ட்டின் ஹைப்பர் ஹைப்ரிட் SUV; 1,500 பேர் மட்டுமே வாங்க முடியும்.! அப்படி என்ன இருக்கு.?
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
Embed widget