மேலும் அறிய

CM Vijay: விஜய் - சங்கீதா திருமண நாள்.. முதல் சந்திப்பு நிகழ்ந்தது எப்படி? - வீடியோவை பகிரும் ரசிகர்கள்!

ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று விஜய், சங்கீதா திருமண நாள் என்பதால் இணையத்தில் பழைய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் விஜய் - சங்கீதா முதல் சந்திப்பு பற்றி நிகழ்வைக் காணலாம்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ள முதலமைச்சர் விஜய், அவரின் மனைவி சங்கீதா இருவரும் மீண்டும் சேர வேண்டும் என திருமண நாளில் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

விஜய் - சங்கீதா திருமண நாள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள ஜோசப் விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த காலக்கட்டம் அது. அப்போது  அவரை படப்பிடிப்பு தளத்தில் சந்திக்க ஏராளமான ரசிகர்கள் வருகை தருவது வழக்கம். அப்படி ஒரு ரசிகையாக வந்தவர் தான் சங்கீதா. அது லவ் டுடே படத்தின் ஷூட்டிங் என விஜய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில், “உங்க அம்மா, அப்பாவை மீட் பண்ணலாமா என கேட்டார்கள். அவர்கள் இருவரும் என்னிடம் பேசுவார்களா எனவும் கேள்வியெழுப்பினார். நான் அதற்கு அதெல்லாம் இருவரும் நன்றாக பேசுவார்கள். நான் தான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன் என தெரிவித்தேன். அந்த சந்திப்பு நடந்த பிறகு அப்பா என்னை அழைத்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் என சொன்னார். 

அப்படி ஏதாவது தனியாக பேச வேண்டும் என்று அப்பா சொல்லிவிட்டால் எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கும். அப்படியாக அவர் பேசும்போது, சங்கீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என கேட்டார். நான் நல்ல பொண்ணு என கூறினேன். நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிறீயா என உடனே அடுத்த கேள்வி வந்தது. இதனை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நானும், அம்மாவும் நீண்ட நாட்களாகவே இதைப்பற்றி யோசித்து வந்தோம். நீ என்ன நினைக்கிறாய் என அப்பா கேட்டவுடன் உங்கள் இஷ்டம் என சொல்லி விட்டேன். 

குடும்பத்தோடு லண்டன் போனோம். அதற்கு முன்னால் நிச்சயம் செய்துக் கொள்ளலாமா என கேட்டார். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் நிச்சயம் நடந்தது. சங்கீதாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என முடிவான பிறகு நான் அவரை காதலிக்க தொடங்கினேன். உண்மையிலே அந்த உணர்வு ரொம்ப நல்லாருக்குது” என அந்த வீடியோவில் விஜய் தெரிவித்திருப்பார். 

அண்ணன், அண்ணி சீக்கிரம் சேரணும்

விஜயிடம் இருந்து கருத்து வேறுபாட்டால் சங்கீதா விவாகரத்து கேட்டது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. கடந்த 6 மாதங்களாகவே அவரது ரசிகர்கள், தவெகவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்கள் அண்ணன் முதலமைச்சரான நிலையில் அதனை அருகில் இருந்து ரசிக்க அண்ணி சங்கீதா இல்லையே என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதற்கிடையில் விவாகரத்து வழக்கை திரும்ப பெறுவதாக சங்கீதா அறிவித்தார். இது விஜய் ரசிகர்கள், ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது. இந்நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதியான இன்று அவர்களின் திருமண நாள் என்பதால் அந்த வீடியோவை பகிர்ந்து சீக்கிரம் இருவரும் ஒன்று சேரணும் என வேண்டுகோள் விடுத்து, பிரார்த்தனைகளும் மேற்கொண்டுள்ளனர். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget