Cinema Headlines: தலைவர் 171, லியோ 2 அப்டேட் தந்த லோகேஷ்: நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்: சினிமா செய்திகள்
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி காணலாம்.
விலகும் விஜய்! ஆனாலும் லியோ 2க்கு வாய்ப்பிருக்கு: எப்படி? - லோகேஷ் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என இவரது அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளார். இதற்கான கதை தயாரிப்பு வேலைகளை லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படிக்க
எழுதிகிட்டே இருக்கேன்! தலைவர் 171 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்...
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெய்பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதே சமயம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் படிக்க
வாவ்! அழைப்பிதழ் இல்ல; பட்டாசு இல்ல! பசுமை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க
“இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை உழைக்கத் தூண்டுகிறது” - சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரம்!
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். பிறந்தநாள் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டைட்டில் டீசரை ராஜ்கமல் ஃபிலிஸ் வெளியிட்டது. மேலும் இதே நாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கும் படமான கொட்டுக்காளியும் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் படிக்க
வேகமாக பிக்-அப் ஆகும் ஜெயம் ரவியின் சைரன்.. 2 நாள் வசூல் இவ்வளவா!
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். மேலும் படிக்க
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார். மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க