மேலும் அறிய

Vikram Speech: ‘சினிமாவிலிருந்து ஓய்வுபெற போகிறேன்’ PS1 பாடல் வெளியிட்டு விழாவில் விக்ரம் திடுக் பேச்சு!

பொன்னியின் செல்வன் ‘சோழா சோழா’ பாடல் வெளியீட்டு நிகழ்வில் விக்ரம், கார்த்தி, மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன்  ‘சோழா சோழா’  பாடல் வெளியீட்டு நிகழ்வில் விக்ரம், கார்த்தி, மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

 

சோழா சோழா’  பாடல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்வில் விக்ரம் பேசும் போது, “ எனக்கும் மணிரத்னத்துக்கும் இடையே ஒரு ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப் இருக்கிறது. எனக்கும் அவருக்குமிடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. கனவு நிஜமாகியிருக்கிறது. மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரின் படங்களில் நடித்த பின்னர் சினிமா துறையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருக்கிறேன். இந்தப்படத்தில் இப்படியான ஒரு கதாபாத்திரம் கிடைத்தற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.” என்று பேசினார். 

 

பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) படத்தில் இருந்து 2 ஆம் பாடலான சோழா சோழா பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 

                                                 

கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது. 


5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக “பொன்னி நதி” வெளியானது.கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து பொன்னி நதி பாடல் பாடலின் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டது.


இதனிடையே சில தினங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் படத்தை ஐமேக்ஸ் திரை வடிவிலும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தது. இதன் மூலம் தமிழில் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஆதித்த கரிகாலன் போரில் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் 2 ஆம் பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகும் என்ற லைகா நிறுவனம் தெரிவித்தது. சோழா சோழா என தொடங்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம், நகுல் அபயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர். 

முன்னதாக இன்று காலையில் இப்பாடலின் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழில் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத், தெலுங்கில் இசையமைப்பாளர் தமன், இந்தியில் இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரபோர்டி ஆகியோர் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சோழா சோழா பாடல் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்  #CholaChola, #PonniyinSelvan ஆகிய ஹேஸ்டேக்குகளில் கொண்டாடி வருகின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget